பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
சங்கராபுரம்-சங்கராபுரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான தடுப்பூசி முகாம் நடந்தது.தாலுகா அலுவலகத்தில் நடந்த முகாமை கலெக்டர் ஸ்ரீதர் துவக்கி வைத்து, சங்கராபுரம் வட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு சுகாதாரத் துறை மற்றும் வருவாய்த் துறை மூலம் விடுபடாமல் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.முகாமில்

சங்கராபுரம்-சங்கராபுரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான தடுப்பூசி முகாம் நடந்தது.தாலுகா அலுவலகத்தில் நடந்த முகாமை கலெக்டர் ஸ்ரீதர் துவக்கி வைத்து, சங்கராபுரம் வட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு சுகாதாரத் துறை மற்றும் வருவாய்த் துறை மூலம் விடுபடாமல் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.முகாமில் தாசில்தார் சையத் காதர், டாக்டர் சங்கீதா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி, சுகாதார ஆய்வாளர் பாலமுருகன், வருவாய் ஆய்வாளர் திருமலை, வி.எ.ஓ., நிமிலன், கிராம சுகாதார செவிலியர் சுமதி பங்கேற்றனர்.முகாமில் 24 மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணி மற்றும் பாலுட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.கள்ளக்குறிச்சிகள்ளக்குறிச்சி தாலுகா அலுவலக வளாகத்தில் தாசில்தார் பிரபாகரன் துவக்கி வைத்தார். தாசில்தார்கள் மணிகண்டன், சேகர், நகராட்சி ஆரம்ப சுகாதார மைய மருத்துவ அலுவலர் பங்கஜம், மொபைல் டீம் மருத்துவ அலுவலர் சவுந்தர்யன், வருவாய் ஆய்வாளர் ராமசாமி, வி.ஏ.ஓ., அக்பர்பாஷா, துப்புரவு ஆய்வாளர் செல்வகுமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மகாலிங்கம், சுகாதார ஆய்வாளர்கள் சிட்டிபாபு, கவியரசன், செவிலியர் தேன்மொழி பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X