மயூரா ஆற்றின் மதகுகளை சீரமைக்க கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மயூரா ஆற்றின் மதகுகளை சீரமைக்க கோரிக்கை

Added : ஜூலை 20, 2021
Share
சின்னசேலம்-பெரியசிறுவத்துார் ஆற்றில் உள்ள மதகுகளை மழைக்காலம் துவங்கும் முன் சீரமைக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சின்னசேலம் அடுத்த பெரியசிறுவத்துார் கிராமத்தின் வழியே மயூரா ஆறு செல்கிறது. ஆற்றில் தண்ணீர் செல்லும் போது இங்குள்ள மதகுகளின் வழியாகவும், ஓடைகளின் மூலமாகவும் கிராமத்தைச் சுற்றியுள்ள 100 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம்

சின்னசேலம்-பெரியசிறுவத்துார் ஆற்றில் உள்ள மதகுகளை மழைக்காலம் துவங்கும் முன் சீரமைக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சின்னசேலம் அடுத்த பெரியசிறுவத்துார் கிராமத்தின் வழியே மயூரா ஆறு செல்கிறது. ஆற்றில் தண்ணீர் செல்லும் போது இங்குள்ள மதகுகளின் வழியாகவும், ஓடைகளின் மூலமாகவும் கிராமத்தைச் சுற்றியுள்ள 100 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றன.ஆனால், மதகுகளில் முறையான பராமரிப்பு இல்லாததால் புதர்கள் மண்டி காணப்படுகிறது. மேலும் ஆற்றினுள் கருவேல முட் செடிகள் வளர்ந்து தண்ணீர் செல்வதற்கான வழியை அடைத்துள்ளன.ஒவ்வொரு ஆண்டும் ஆற்றில் தண்ணீர் வரும் போது அதனை பயன்படுத்த முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.எனவே, விவசாயிகள் நீர் பாசனம் பெறும் வகையில் ஆற்றின் தரைப்பாலத்தை உயர்த்தி, மதகுகளை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X