சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கலெக்டர் அலுவலகத்தில் கணவன், மனைவி தர்ணா

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில், அரசு அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேசியக் கொடியுடன் கணவன், மனைவி தர்ணாவில் ஈடுபட்டனர்.உளுந்துார்பேட்டை அடுத்த எஸ்.மலையனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர். இவர் தனது மனைவி கீதாவுடன், நேற்று கலெக்டர் அலுவலகம் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.உடன் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி, கோரிக்கை குறித்து

கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில், அரசு அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேசியக் கொடியுடன் கணவன், மனைவி தர்ணாவில் ஈடுபட்டனர்.உளுந்துார்பேட்டை அடுத்த எஸ்.மலையனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர். இவர் தனது மனைவி கீதாவுடன், நேற்று கலெக்டர் அலுவலகம் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.உடன் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி, கோரிக்கை குறித்து மனு அளிக்க அறிவுறுத்தினர்.அதன்பேரில், அவர்கள் கலெக்டரிடம் அளித்துள்ள மனு:எஸ்.மலையனுார் கிராமத்தில் ஆதிதிரவிடர் நலத்துறைக்குச் சொந்தமான இடத்தை அதே பகுதியைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து கட்டடம் கட்ட முயல்கின்றனர். இது குறித்து தாசில்தாருக்கும், வி.ஏ.ஓ.,க்கும் போன் மூலம் தகவல் அளித்ததால், கடந்த மே 31ம் தேதி தாக்கப்பட்டேன்.இதுகுறித்து கடந்த ஜூன் 1ம் தேதி எலவனாசூர்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். அங்கு பணிபுரியும் சப்-இன்ஸ்பெக்டர் சமாதானமாக செல்லும் படி கூறினார்.புகாரை வாபஸ் பெறாததால் பொய் வழக்கு பதிவு செய்துள்ளார். எனவே, பொய் வழக்கு பதிவு செய்த சப்-இன்ஸ்பெக்டர், நான் அளித்த தகவலை ஆக்கிரமிப்பாளர்களிடம் கூறிய வி.ஏ.ஓ., கிராம உதவியாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதுடன் என் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கினை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X