தமிழ்நாடு

19,896 பேர் ; மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி...22ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிழ்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி-அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இந்தாண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வில் 19 ஆயிரத்து 896 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். பள்ளி தலைமையாசிரியர்கள் மூலம் வரும் 22ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் பள்ளிகளில் வழங்கப்படுகிறது.கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. ஊரடங்கு காரணமாக அரசு விதிமுறைகளுக்குட்பட்டு
 19,896 பேர் ; மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி...22ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிழ்

கள்ளக்குறிச்சி-அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இந்தாண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வில் 19 ஆயிரத்து 896 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

பள்ளி தலைமையாசிரியர்கள் மூலம் வரும் 22ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் பள்ளிகளில் வழங்கப்படுகிறது.கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. ஊரடங்கு காரணமாக அரசு விதிமுறைகளுக்குட்பட்டு ஆன்லைன் வகுப்பு மூலம் மாணவர்கள் வீடுகளில் இருந்தே பாடங்களைக் கற்றனர். \
மேலும், தமிழக அரசு மூலம் அரசு கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் கற்பிக்கப்பட்டு அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் மூலம் மாணவர்கள் கண்காணிக்கப்பட்டனர். தேர்வு நெருங்கிய சூழ்நிலையில், இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் கணினி அறிவியல் பாடப்பிரிவுகளில் உள்ள பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு செய்முறை தேர்வு நடத்தப்பட்டது.இந்நிலையில், நோய் தாக்கம் தீவிரமடைந்ததால் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டு, பள்ளியில் பயின்ற அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.இதனையடுத்து, மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.அதன்படி, பிளஸ் 2 மாணவர்கள், பத்தாம் வகுப்பில் மூன்று பாடப் பிரிவுகளில் எடுத்த அதிக மதிப்பெண் அடிப்படையிலும், பிளஸ் 2 செய்முறைத் தேர்வு அடிப்படையிலும் மதிப்பெண் வழங்க, முடிவு செய்யப்பட்டது.அதன்படி நேற்று காலை 10:30 மணிக்கு பள்ளிக்கல்வித் துறை மூலம் பிளஸ் 2 பொதுதேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.இதில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு, அரசு நிதியுதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் உள்ள 116 பள்ளிகளில் பிளஸ் 2 பயின்ற 9,800 மாணவர்கள், 10 ஆயிரத்து 96 மாணவிகள் என மொத்தம் 19 ஆயிரத்து 896 பேரும் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

இது குறித்து சி.இ.ஓ., அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கொரோனா தொற்று சூழலையொட்டி அரசு விதிமுறைக்குட்பட்டு பிளஸ் 2 தேர்வில் அனைவரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவ, மாணவிகளுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் வரும் 22ம் தேதி முதல் தலைமை ஆசிரியர்கள் மூலம் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அப்போது, சமூக இடைவெளி, முகக் கவசம் அணிதல், பள்ளி வளாகத்தில் கிருமிநாசினி தெளித்தல், சானிடைசர் உள்ளிட்ட கொரோனா விதிமுறையை கடைபிடிக்கவும் பள்ளி தலைமையாசியர்களுக்கு அறிவுறுத்தப்பட உள்ளது' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X