கிரைம் செய்திகள் 

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
டிரைவர் மீது வழக்குபுவனகிரி போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புவனகிரி கடைவீதிகள் போக்குவரத்துக்கு இடையூறாக லாரியை நிறுத்தி லோடு இறக்கிய புவனகிரி முருகன் கோவில்தெரு டிரைவர் கலியபெருமாள் 83, என்பவர் மீது வழக்கு பதிந்துள்ளனர்மகள் மாயம்: தந்தை புகார் புவனகிரி அருகே வடக்குத்திட்டை முருகன்கோவில்தெரு முருகையன் மகள் பிரியங்கா,22; சி.முட்லுார்

டிரைவர் மீது வழக்கு

புவனகிரி போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புவனகிரி கடைவீதிகள் போக்குவரத்துக்கு இடையூறாக லாரியை நிறுத்தி லோடு இறக்கிய புவனகிரி முருகன் கோவில்தெரு டிரைவர் கலியபெருமாள் 83, என்பவர் மீது வழக்கு பதிந்துள்ளனர்மகள் மாயம்: தந்தை புகார்

புவனகிரி அருகே வடக்குத்திட்டை முருகன்கோவில்தெரு முருகையன் மகள் பிரியங்கா,22; சி.முட்லுார் அரசு கல்லுாரியில் எம்.எஸ்சி., இறுதியாண்டு படித்து வருகிறார். கடந்த 12 ம் தேதி கல்லுாரியில் ரெக்கார்டு நோட்டு வாங்க செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.சிறுவர்களை தாக்கியவர் கைது

புதுச்சத்திரம் அடுத்த புத்திரவல்லியைச் சேர்ந்தவர் ராஜாராமன், 60; கூலித்தொழிலாளி. இவரும், இதே பகுதியைச் சேர்ந்த சங்கர் மகன் பாரதி, 15; விஸ்வநாதன் மகள் ராகவி, 13; வீரமணி மகன் ராகுல், 15; துரைசாமி மகன் அபினேஷ், 15; ஐந்துபேரும், காயல்பட்டைச் சேர்ந்த முனுசாமி மகன் கதிர் நிலத்தின் அருகே நேற்று முன்தினம் ஆடு மேய்த்துள்ளனர். இதைப்பார்த்த கதிர்,50; தனது நிலத்தில் ஆடு மேய்த்ததாக பாரதி, ராகவி, ராகுல், அபினேஷ் ஆகியோரை தாக்கினார். தட்டிக்கேட்ட ராஜாராமனை திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின்பேரில், புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் வினதா வழக்கு பதிந்து கதிரை கைது செய்தார்.கார் மோதி சிறுவன் பலி

ராமநத்தம் அடுத்த வடகராம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் துரைசாமி மகன் ஜெயக்குமார்,17; இவர் ராமநத்தத்தில் உள்ள ஸ்டுடியோவில் வேலை செய்தார். நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு இயற்கை உபாதை கழிக்க தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது, சென்னை சென்ற கார் மோதி காயமடைந்தார். திருச்சி தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார். புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். சூதாடிய 10 பேர் கைது

கடலுார், முதுநகர் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். சலங்கை நகரில் பணம் வைத்து சூதாடிய முதுநகரைச் சேர்ந்த ராஜ்குமார், 45; பன்னீர்செல்வம், 65; தேவநாதன், 48; சேகர், 57; சந்திரசேகர், 46; வடிவேல், 40; மணவெளி சுடுகாடு அருகில் சாலக்கரையைச் சேர்ந்த சிவலிங்கம், 47; சீதாராமன் ஆகியோரை கைது செய்தனர். இதேப் போன்று மஞ்சக்குப்பத்தில் பணம் வைத்து சூதாடிய அதே பகுதியைச் சேர்ந்த இதழ்மணி, 34; கோவர்த்தனன், 34; ஆகியோரை புதுநகர் போலீசார் கைது செய்தனர்.ஹான்ஸ் விற்றவர் கைது

பெண்ணாடத்தில் உள்ள பெட்டிக்கடைகளில் சப் இன்ஸ்பெக்டர் கோபிநாத் மற்றும் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். பெண்ணாடம், காமராஜர் தெருவில் 'ஹான்ஸ்' பதுக்கி வைத்து விற்ற அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக், 52, என்பவரை கைது செய்து, 'ஹான்ஸ்' பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.தொழிலாளி தற்கொலை

பெண்ணாடம் அடுத்த பாசிக்குளம், புது காலனியைச் சேர்ந்தவர் மணிமாறன், 30; கூலித்தொழிலாளி. இவரது மனைவி பவானி, 28; இரு குழந்தைகள் உள்ளனர். தொடர் வயிற்றுவலி இருந்தது. கடந்த 15ம் தேதி மீண்டும் வலி ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை 7:00 மணியளவில் இறந்தார். புகாரின் பேரில், கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். பன்றி திருடிய 2 பேர் கைது

சிதம்பரம் காரிய பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கர். இவர் அதே பகுதியில் பன்றிகளை வளர்த்து வரும் தொழில் செய்கிறார். அவர் வைத்திருந்த பன்றிகளில் இரண்டு பன்றிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். புகாரின் பேரில் கீழ் அனுவம்பட்டு பாஸ்கர், 35: சிதம்பரம் தேசிங்கு, 50; ஆகியோரை நகர போலீசார் கைது செய்தனர். கணவர் மாயம் : மனைவி புகார்

சிதம்பரம் சிவசக்தி நகரைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி, 60; இவரது கணவர் கோபால், 64; ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ளவர். இவர் வடலுார் சத்திய ஞான சபை மற்றும் வெளியூரில் உள்ள கோவில்களுக்கு சென்று திரும்புவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. அதேபோல் கடந்த மாதம் 30ம் தேதி வீட்டில் இருந்து புறப்பட்ட அவர் வரவில்லை. இதுகுறித்து, மனைவி ராஜலட்சுமி கொடுத்த புகாரின் பேரில், சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிந்து கோபாலை தேடி வருகின்றனர்.பெயிண்டர் தற்கொலை

நெல்லிக்குப்பம் அடுத்த குணமங்கலத்தை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ், 34; பெயிண்டர். இவர் சரியாக வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு ஊர் சுற்றி வந்ததால் கணவன் , மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த அவர் நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத போது துாக்கு போட்டு இறந்தார். நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X