பொது செய்தி

தமிழ்நாடு

5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் செயலர்களை இடமாற்றம் செய்ய வேண்டும்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
கடலுார்-ஒரே ஊராட்சியில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் செயலர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என, ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு கலெக்டருக்கு கோரிக்கை வைத்துள்ளது.இது குறித்து கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பினர், தலைவர் வளர்மதி ராஜசேகரன், செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் கதிரவன் ஆகியோர் கலெக்டர் பாலசுப்ரமணியத்திடம் அளித்த மனு:

கடலுார்-ஒரே ஊராட்சியில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் செயலர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என, ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு கலெக்டருக்கு கோரிக்கை வைத்துள்ளது.இது குறித்து கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பினர், தலைவர் வளர்மதி ராஜசேகரன், செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் கதிரவன் ஆகியோர் கலெக்டர் பாலசுப்ரமணியத்திடம் அளித்த மனு: பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் ஊராட்சி தலைவர்களின் ஆலோசனைப்படி பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும். காசோலையில் தலைவர் மட்டுமே கையெழுத்திட வேண்டும். 5 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே ஊராட்சியில் பணியாற்றும் செயலர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும். ஊராட்சியில் அனைத்து திட்டங்களும் தலைவர்கள் மட்டுமே துவக்கி வைக்க வேண்டும், தலைவர்களுக்கு ரூ.30 ஆயிரம் மாத ஊதியமாக வழங்க வேண்டும். ஊராட்சியில் நடக்கும் வளர்ச்சி பணிகளுக்கு தலைவர் அனுமதியுடன் ஆற்றில் மணல் எடுக்க அனுமதிக்க வேண்டும். சரியாக பணிபுரியாத ஊழியர்களை பணிநீக்கம் செய்து வேறொருவரை நியமனம் செய்ய தலைவருக்கு அதிகாரம் அளிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X