சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின்வாரிய தொழிலாளர்கள் கடலுாரில் ஆர்ப்பாட்டம்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
கடலுார்-மின்வாரியத்தை தனியார் மயமாக்கிட வழிவகை செய்யும் மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் நேற்று கடலுாரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கடலுார் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச., மாநில துணை பொதுச்செயலாளர் வேல்முருகன் தலைமை

கடலுார்-மின்வாரியத்தை தனியார் மயமாக்கிட வழிவகை செய்யும் மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் நேற்று கடலுாரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கடலுார் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச., மாநில துணை பொதுச்செயலாளர் வேல்முருகன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ., மாநில துணைப் பொது செயலாளர் பழனிவேல், கணக்காயர் களத்தொழிலாளர் சங்க வட்டச்செயலாளர் வேங்கடபதி, கருணாகரன், ரவிசங்கர் உட்பட பலர் பங்கேற்றனர். சேத்தியாத்தோப்பு துணைமின் நிலைய நுழைவு வாயிலில் நடந்து கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஜ.டி.யூ., தொழிற்சங்க சிதம்பரம் கோட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். தொழிற்சங்க எல்.எல்.எப்., சிதம்பரம் கோட்ட செயலாளர் தமிழ்மணி, தொ.மு.ச., நிர்வாகி கணேசன் முன்னிலை வகித்தனர். மின்முகவர் வீரமணி, கரிகால், விஜயன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X