பொது செய்தி

தமிழ்நாடு

காட்டுமன்னார்கோவிலில் மார்க்கெட் கமிட்டியில் பருத்தி ஏலம்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
கடலுார்-காட்டுமன்னார்கோவில் மார்க்கெட் கமிட்டியில் பருத்தி ஏலம் துவக்கப்பட்டுள்ளது.கடலுார் விற்பனைக்குழு செயலாளர் பாலசுப்ரமணியன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:காட்டுமன்னார்கோவில் மார்க்கெட் கமிட்டியில் கடந்த 10ம் தேதி முதல் பருத்தி ஏலம் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடந்து வருகிறது. கடந்த இரண்டு வாரங்களில் ரூ. 17 லட்சம் மதிப்பிலான 300 குவிண்டால் பருத்தியினை

கடலுார்-காட்டுமன்னார்கோவில் மார்க்கெட் கமிட்டியில் பருத்தி ஏலம் துவக்கப்பட்டுள்ளது.கடலுார் விற்பனைக்குழு செயலாளர் பாலசுப்ரமணியன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:காட்டுமன்னார்கோவில் மார்க்கெட் கமிட்டியில் கடந்த 10ம் தேதி முதல் பருத்தி ஏலம் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடந்து வருகிறது. கடந்த இரண்டு வாரங்களில் ரூ. 17 லட்சம் மதிப்பிலான 300 குவிண்டால் பருத்தியினை வியாபாரிகள் கொள்முதல் செய்துள்ளனர்.கடந்த வாரம் காட்டுமன்னார்கோவில் கமிட்டியில் நடந்த மறைமுக ஏலத்தில் ஒரு குவிண்டால் பருத்தியை தரத்திற்கேற்ப அதிகபட்ச விலை ரூ. 6850, சராசரி விலை ரூ. 6750 , குறைந்தபட்ச விலை ரூ. 4619, உள்ளூர் மற்றும் வெளியூர் மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டது. காட்டுமன்னார்கோவில் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பருத்தியை மார்க்கெட் கமிட்டியில் நல்ல விலைக்கு விற்று பயனடையலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X