பொது செய்தி

தமிழ்நாடு

மக்கள் கூட்டம் இல்லாததால் காய்கறி வியாபாரிகள் ஏமாற்றம்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
நெல்லிக்குப்பம்-காராமணிக்குப்பம் சந்தை அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவால் திடீரென நடந்ததால் மக்கள் கூட்டமின்றி காய்கறி வியாபாரிகள் ஏமாற்றமடைந்தனர்.நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பத்தில் சாலையோரம் அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமை சந்தை நடக்கும். இங்கு கடைகள் நடத்துபவர்களிடம் கட்டணம் வசூலிக்க கடந்த ஆண்டு விட்ட குத்தகை கடந்த

நெல்லிக்குப்பம்-காராமணிக்குப்பம் சந்தை அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவால் திடீரென நடந்ததால் மக்கள் கூட்டமின்றி காய்கறி வியாபாரிகள் ஏமாற்றமடைந்தனர்.நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பத்தில் சாலையோரம் அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமை சந்தை நடக்கும். இங்கு கடைகள் நடத்துபவர்களிடம் கட்டணம் வசூலிக்க கடந்த ஆண்டு விட்ட குத்தகை கடந்த 30 ம் தேதியுடன் முடிந்தது. நடப்பு ஆண்டுக்கான குத்தகையில் யாரும் கலந்து கொள்ளாததால் 30ம் தேதிக்கு ஏலத்தை ஒத்தி வைத்தனர். அது வரை சந்தை நடக்க கூடாது என கூறியிருந்தனர்.ஆனால் பழைய ஏலம் எடுத்தவர் கொரோனா காலத்தில் சந்தை செயல்படாமல் நஷ்டம் அடைந்ததால் ஏலம் நடக்கும் வரை சந்தை கட்டணம் வசூலித்து கொள்ளலாம் என அதிகாரிகள் வாய்மொழியாக உத்தரவு வழங்கினர். இதை தொடர்ந்து நேற்று சந்தை செயல்பட்டது. இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் கருவாடு, காய்கறி கடைகள் சந்தையில் செயல்பட்டது. பெரும்பாலானவர்கள் முககவசம் அணியாமல் கருவாடு வாங்கி சென்றனர். ரூ 50 லட்சத்திற்கு மேல் கருவாடு விற்றது. சந்தை நடப்பது தெரியாததால் காய்கறிகள் வாங்க மக்கள் கூட்டமின்றி வியாபாரிகள் ஏமாற்றத்துடன் பொருட்களை எடுத்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X