பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன பயிற்சி

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
விருத்தாசலம்,-விருத்தாசலம் அடுத்த அரசக்குழி கிராமத்தில், அட்மா திட்டத்தில் விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசனம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.கம்மாபுரம் வட்டார வேளாண்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, உதவி இயக்குனர் சுதமதி தலைமை தாங்கினார். பினோலக்ஸ் கம்பெனி அலுவலர் கோபி பயிற்சியளித்தார். துணை வேளாண் அலுவலர் முத்துசாமி, உதவி வேளாண் அலுவலர் புவனேஸ்வரி, வட்டார

விருத்தாசலம்,-விருத்தாசலம் அடுத்த அரசக்குழி கிராமத்தில், அட்மா திட்டத்தில் விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசனம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.கம்மாபுரம் வட்டார வேளாண்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, உதவி இயக்குனர் சுதமதி தலைமை தாங்கினார். பினோலக்ஸ் கம்பெனி அலுவலர் கோபி பயிற்சியளித்தார். துணை வேளாண் அலுவலர் முத்துசாமி, உதவி வேளாண் அலுவலர் புவனேஸ்வரி, வட்டார தொழில்நுட்ப மேலாளர் தங்கதுரை, உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் ரமேஷ், செல்லமுத்து உடனிருந்தனர். அதில், பாசனநீர் சேமிப்பு, உரிய நேரத்தில் நீர்பாய்ச்சுதல், மேடு பள்ளங்களிலும் சிறப்பான செயல்பாடு, சிறு, குறு விவசாயிகளுக்கு முழு மானியம், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீத மானியம் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது. விவசாயிகள் போட்டோ, ஆதார், ரேஷன் கார்டு, சிட்டா, அடங்கல், நிலவரைபடம், சிறு விவசாயி அட்டை, சாயில் அட்டை ஆகியவற்றை கொடுத்து நுண்ணீர் பாசன திட்டத்தில் பயன்பெற அறிவுறுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X