பொது செய்தி

தமிழ்நாடு

வீட்டுமனைப்பட்டா வழங்கல்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
திட்டக்குடி--திட்டக்குடி அடுத்த மருதத்துாரில் 85 பயனாளிகளுக்கு, இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விருத்தாசலம் சப்கலெக்டர் அமித்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் செல்வ பாண்டியன் வரவேற்றார். தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் தலைமை தாங்கி, 85 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டாவை

திட்டக்குடி--திட்டக்குடி அடுத்த மருதத்துாரில் 85 பயனாளிகளுக்கு, இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விருத்தாசலம் சப்கலெக்டர் அமித்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் செல்வ பாண்டியன் வரவேற்றார். தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் தலைமை தாங்கி, 85 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டாவை வழங்கிப் பேசினார். ஆதிதிராவிட நல தனிதாசில்தார் கமலா, திட்டக்குடி தாசில்தார் தமிழ்செல்வி, மண்டல துணைதாசில்தார் சிவராமன், ஆர்.ஐ.,லலிதா, வி.ஏ.ஓ.,ரவிக்குமார் மற்றும் தி.மு.க.,நிர்வாகிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில் தகுதியுடைய பயனாளிகள் சிலருக்கு பட்டா வழங்கவில்லை. அதிருப்தியடைந்த அவர்கள் மேடையில் ஏறி அமைச்சரிடம் முறையிட முயன்றனர். போலீசார் தடுத்து நிறுத்தியதால் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. தொடர்ந்து நிகழ்ச்சி முடிந்து மேடை யிலிருந்து இறங்கிய அமைச்சரிடம் பொதுமக்கள் முறையிட்டனர். விடுபட்ட பயனாளிகளுக்கும் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சமாதானம் செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X