பொது செய்தி

தமிழ்நாடு

நுாறு நாட்கள் வேலை வழங்க மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
கடலுார்-தேசிய ஊரக வேலை திட்டத்தில் 100 நாட்கள் வேலை வழங்க வேண்டுமென மாற்றுத்திறனாளிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.இதுகுறித்து கடலுார் மாற்றுத்திறனாளிகள் புதுவாழ்வு நலச்சங்கம் சார்பில் சங்க மாவட்ட தலைரவ் சண்முகம், செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் கரோலின்மேரி, துணைத் தலைவர் பாலமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஊரக வளர்ச்சித்துறை இயக்குனரிடம் அளித்த மனு:கடலுார்

கடலுார்-தேசிய ஊரக வேலை திட்டத்தில் 100 நாட்கள் வேலை வழங்க வேண்டுமென மாற்றுத்திறனாளிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.இதுகுறித்து கடலுார் மாற்றுத்திறனாளிகள் புதுவாழ்வு நலச்சங்கம் சார்பில் சங்க மாவட்ட தலைரவ் சண்முகம், செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் கரோலின்மேரி, துணைத் தலைவர் பாலமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஊரக வளர்ச்சித்துறை இயக்குனரிடம் அளித்த மனு:கடலுார் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு, மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் (100 நாட்கள் வேலை) முழுமையாக வழங்க வேண்டும். முழு ஊதியம் ரூ. 273 வழங்க வேண்டும், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணிதள பொறுப்பாளர் பணிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அனைத்து ஊராட்சிகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசாணையில் உள்ளபடி 5 சவீத இட ஒதுக்கீட்டின்படி கான்கிரீட் வீடு கட்டித்தர வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X