தமிழ்நாடு

மகிழ்ச்சி: கடலூர் மாவட்டத்தில் மாணவ, மாணவிகள்...பிளஸ் 2 படித்த 32 ஆயிரத்து 278 பேரும் தேர்ச்சி

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
கடலுார், ஜூலை 20-கல்வியில் பின்தங்கிய மாவட்டமான கடலுாரில் பிளஸ் 2 படித்த 32 ஆயிரத்து 278 பேரும் தேர்ச்சி என அறிவித்து மதிப்பெண்களும் குவிக்கப்பட்டதால், மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியடைந்ததுடன், கல்வித்துறை அதிகாரிகளும் நிம்மதியடைந்தனர்.கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன. தமிழக பள்ளிக் கல்வித் திட்டத்தில் படித்த பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொதுத்
 மகிழ்ச்சி:  கடலூர் மாவட்டத்தில் மாணவ, மாணவிகள்...பிளஸ் 2 படித்த 32 ஆயிரத்து 278 பேரும் தேர்ச்சி

கடலுார், ஜூலை 20-கல்வியில் பின்தங்கிய மாவட்டமான கடலுாரில் பிளஸ் 2 படித்த 32 ஆயிரத்து 278 பேரும் தேர்ச்சி என அறிவித்து மதிப்பெண்களும் குவிக்கப்பட்டதால், மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியடைந்ததுடன், கல்வித்துறை அதிகாரிகளும் நிம்மதியடைந்தனர்.

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன. தமிழக பள்ளிக் கல்வித் திட்டத்தில் படித்த பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. தேர்வின்றி மதிப்பெண் வழங்குவது குறித்த வழிகாட்டு முறையை முடிவு செய்ய, மதிப்பெண் நிர்ணய கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டியின் பரிந்துரைப்படி, பிளஸ் 2 செய்முறை தேர்வில் 30 மதிப்பெண், பிளஸ் 1 பொதுத் தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்ணில் 20 சதவீதம் மற்றும் 10ம் வகுப்பில் அதிகபட்சம் மதிப்பெண் பெற்ற, மூன்று பாடங்களின் சராசரி மதிப்பெண்ணில் 50 சதவீதம் சேர்த்து, பிளஸ் 2 மதிப்பெண் கணக்கிடப்பட்டது.அதன்படி, பிளஸ் 2 மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண் விபரம் நேற்று அரசு தேர்வுத் துறையால் வெளியிடப்பட்டது. நேற்று காலை முதல் தேர்வுத் துறை இணைய தளத்தில், மாணவர்கள் தங்களின் மதிப்பெண் விபரங்களை தெரிந்து கொண்டனர்.கடலுார் மாவட்டத்தில் 107 அரசுப்பள்ளிகள், 7 ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள், 28 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், 88 மெட்ரிக் பள்ளிகள் மற்றும் 6 சுயநிதி பள்ளிகள் உட்பட மொத்தம் 236 பள்ளிகளிலிருந்து 15 ஆயிரத்து 793 மாணவர்கள், 16 ஆயிரத்து 485 மாணவிகள் உட்பட 32 ஆயிரத்து 278 பேர் பிளஸ் 2 படித்த நிலையில் அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அவர்களுக்கான மதிப்பெண் விபரமும் வெளியிடப்பட்டுள்ளது.தேர்வு முடிவுகளை பள்ளி தலைமை ஆசிரியரிடமிருந்து தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டதால் கடலுாரில் பள்ளிகளுக்கு மாணவர்கள் சென்று மதிப்பெண் விபரத்தை அறிந்து கொண்டனர். மேலும் மாணவர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிந்து தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணைய தளங்கள் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாணைய இணையதளம் மற்றும் பள்ளிகள் மூலமாகவும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்துகொண்டனர்.

பிளஸ் 2 பொதுத் தேர்வில் கடலுார் மாவட்டம் தமிழகத்தில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது. அடுத்து வெளியான பிளஸ் 1 தேர்வில் மாநிலத்தில் 30 வது இடம் பிடித்து மாவட்டத்திற்கு ஆறுதல் தரும் வகையில் இருந்தது.கொரோனா தொற்று பிரச்னையில் தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி என, அறிவிக்கப்பட்டதும், மதிப்பெண்களும் அதிகளவில் வழங்கியதாலும், மாணவர்கள் குஷியாகினர். அத்துடன், பிளஸ் 2 தேர்வு முடிவால் கடலுார் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளும் நிம்மதியடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X