பொது செய்தி

இந்தியா

பெங்களூரு புறநகரில்ஏரியை ஆக்கிரமித்து பண்ணை வீடு

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
பெங்களூரு-பெங்களூரு புறநகர் மாவட்டத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள குளம், ஏரிகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.அப்போது, ஏரியை ஆக்கிரமித்து பண்ணை வீடு கட்டப்பட்டுள்ளதை கண்டுபிடித்தனர்.பெங்களூரு புறநகர் மாவட்ட அதிகாரிகள் கூறியதாவது:பெங்களூரு தெற்கு பகுதியில் உள்ள குருராயனபுரா கிராமத்தில் உள்ள குளத்தில் சில தனியார் நிறுவனத்தினர், ஏரிகளை ஆக்கிரமித்துள்ளதாக

பெங்களூரு-பெங்களூரு புறநகர் மாவட்டத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள குளம், ஏரிகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.அப்போது, ஏரியை ஆக்கிரமித்து பண்ணை வீடு கட்டப்பட்டுள்ளதை கண்டுபிடித்தனர்.பெங்களூரு புறநகர் மாவட்ட அதிகாரிகள் கூறியதாவது:பெங்களூரு தெற்கு பகுதியில் உள்ள குருராயனபுரா கிராமத்தில் உள்ள குளத்தில் சில தனியார் நிறுவனத்தினர், ஏரிகளை ஆக்கிரமித்துள்ளதாக அப்பகுதியினர் தகவல் அளித்தனர்; அப்பகுதியில் ஆய்வு நடத்தப்பட்டது.ஏரியின் இடத்தை ஆக்கிரமித்து பண்ணை வீடு கட்டியிருப்பதுடன், ஏரி தண்ணீரை, அனுமதி பெறாமல் அருகிலுள்ள நிறுவனம் பயன்படுத்துவதும் கண்டுபிடிக்கப்பட்டது.பண்ணை வீட்டில் நவீன வசதிகளை அமைத்துள்ளனர்; காபி பயிரிட்டுள்ளனர். ஏரி தண்ணீரை விவசாய நிறுவனத்துக்கு பயன்படுத்த ஆங்காங்கே சில தடுப்பணைகள் அமைத்துள்ளதும் தெரிய வந்தது.இதுதொடர்பாக பண்ணை வீடு மற்றும் விவசாய நிறுவன உரிமையாளரின் ஆவணங்களை சரி பார்க்க, தாசில்தாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முறைகேடு நடந்திருப்பது உறுதியான பின், சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X