பொது செய்தி

இந்தியா

குடிநீர் வினியோகத்துக்கு குறைந்தபட்ச கட்டணம்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
பெங்களூரு-'மத்திய அரசின், 'ஜல் ஜீவன்' திட்டத்தில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டாலும், குடிநீர் வினியோகத்துக்கு குறைந்தபட்ச கட்டணம் செலுத்த வேண்டும்' என, குடிநீர் வடிகால் வாரியத்துறை தெரிவித்துள்ளது.கர்நாடக கிராமப்புற குடிநீர் வடிகால் வாரியத்துறை கமிஷனர் விஷால் கூறியதாவது:மத்திய அரசின், 'ஜல் ஜீவன்' திட்டத்தில் கிராமப்பகுதிகளில் குடிநீர் குழாய் இணைப்பு

பெங்களூரு-'மத்திய அரசின், 'ஜல் ஜீவன்' திட்டத்தில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டாலும், குடிநீர் வினியோகத்துக்கு குறைந்தபட்ச கட்டணம் செலுத்த வேண்டும்' என, குடிநீர் வடிகால் வாரியத்துறை தெரிவித்துள்ளது.கர்நாடக கிராமப்புற குடிநீர் வடிகால் வாரியத்துறை கமிஷனர் விஷால் கூறியதாவது:மத்திய அரசின், 'ஜல் ஜீவன்' திட்டத்தில் கிராமப்பகுதிகளில் குடிநீர் குழாய் இணைப்பு வசதிகள் வழங்கப்படுகிறது.குழாய் பதிப்பது மட்டுமே இலவசமாக வழங்கப்படும். அதன் மூலம் வழங்கப்படும் குடிநீர் வினியோகத்துக்கு மீட்டர் அமைக்கப்பட்டு, கணக்கிடப்படும். 1 லிட்டருக்கு ஒரு பைசா என நிர்ணயிக்க திட்டமிடப்பட்டுள்ளது.குடிநீர் வினியோகத்துக்கு குறைந்தபட்ச கட்டணத்தை மக்கள் செலுத்த வேண்டும். இதுகுறித்து இரண்டு மாதங்களில், முழுமையான கட்டண விபரம் அறிவிக்கப்படும்.இந்த குடிநீர் கட்டணத்தொகையை, கிராம பஞ்சாயத்து நிர்வாகங்கள் வசூலிக்க வேண்டும். இந்த தொகையை குடிநீர் வினியோக மேம்பாட்டு பணிகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.நடப்பாண்டில், 20 லட்சத்துக்கும் அதிகமான குடிநீர் இணைப்புகளை ஜல்ஜீவன் திட்டத்தில் வழங்க இலக்கு உள்ளது.இதில், குடியிருப்பு மற்றும் வணிக பயன்பாடு என இரண்டு பிரிவுகளில் இணைப்புகள் வழங்கப்படுகின்றன.ஒருவருக்கு ஒரு நாளுக்கு தலா, 55 லிட்டர் குடிநீர் வினியோகம் இருக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.வரும், 2024ல் 100 சதவீதம் திட்டம் நிறைவு செய்ய பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பெலகாவி, சாம்ராஜ்நகர், மைசூரு மாவட்டங்களில் ஜல் ஜீவன் திட்டப்பணிகள் துரிதமாக நடக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X