பொது செய்தி

இந்தியா

'ஓலா, ஊபர்' போக்குவரத்துநிறுவனங்களில் ஆய்வு

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
பெங்களூரு-ஓலா, ஊபர் போன்ற மொபைல் போன் செயலி மூலம் இயங்கும் போக்குவரத்து நிறுவனங்களில், மாநில போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.கோராமங்களாவில் உள்ள ஓலா நிறுவனம், முருகேஷ்பாளையாவில் உள்ள, ஊபர் நிறுவனம் உட்பட, மொபைல் போன் செயலி மூலம் வாகனங்களை இயக்கி வரும் நிறுவனங்களில், மாநில போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.போக்குவரத்து துறை அதிகாரிகள்

பெங்களூரு-ஓலா, ஊபர் போன்ற மொபைல் போன் செயலி மூலம் இயங்கும் போக்குவரத்து நிறுவனங்களில், மாநில போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.கோராமங்களாவில் உள்ள ஓலா நிறுவனம், முருகேஷ்பாளையாவில் உள்ள, ஊபர் நிறுவனம் உட்பட, மொபைல் போன் செயலி மூலம் வாகனங்களை இயக்கி வரும் நிறுவனங்களில், மாநில போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:ஓலா, ஊபர் போன்ற சில நிறுவனங்கள், தங்களுக்கான டாக்சி இயக்குதலுக்கு, 2016 முதல் 2021 வரை தான் உரிமம் பெற்றுள்ளன. தற்போது உரிமத்தை புதுப்பிக்க வேண்டிய காலம் வந்துள்ளது. ஆனால் நிறுவனங்கள் இதுவரை அதற்கான ஆவணங்களை சமர்பிக்காமல் உள்ளன.இயக்கப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை, ஓட்டுனர்களின் விபரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை சரி பார்த்த பின் தான், உரிமம் புதுப்பிக்கப்படும்.இதை சமர்பிக்க தவறியதால், முதற்கட்டமாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் ஆவணங்களை சரிபார்க்க, ஆய்வு நடத்தினர்.மேலும், குறைந்தபட்ச ஊதியம் மட்டுமே வழங்கப்படுவதாக ஓட்டுனர்கள் பதிவு செய்த புகாரின் அடிப்படையிலும் ஆய்வு நடத்தப்பட்டது.மேலும், வாடிக்கையாளர்களிடம் பெறப்பட்ட கட்டணத்தொகை குறித்தும் விசாரிக்கப்படும். உரிமம் பெறும் போது இருந்த முகவரியும், இப்போதுள்ள முகவரியும் வேறாக உள்ளது.இவ்வாறு பல குளறுபடிகளை நிறுவனங்கள் செய்துள்ளன. உரிய ஆவணங்களை செலுத்தாமல் அலட்சியப்படுத்தினால், அந்த நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்வதற்கும் வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X