பொது செய்தி

இந்தியா

20_DMR_4 / கோப்பு படம் அவசியம்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
குடகு-நீண்ட நாட்களுக்கு பின், காவிரி ஆற்றில் படகு சாகச விளையாட்டுக்கு, மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.குடகு மடிகேரியில் துபாரே யானைகள் முகாம் அமைந்துள்ளது. இந்த முகாமில் காவிரி ஆறு ஓடுகிறது. சுற்றுலா பயணியரை கவர, இங்கு படகு சாகச விளையாட்டு நடக்கும்.கொரோனா உட்பட பல காரணங்களால் இந்த விளையாட்டு நிறுத்தப்பட்டது. இந்நிலையில், இதை மீண்டும் துவக்க, மாவட்ட கலெக்டர்

குடகு-நீண்ட நாட்களுக்கு பின், காவிரி ஆற்றில் படகு சாகச விளையாட்டுக்கு, மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.குடகு மடிகேரியில் துபாரே யானைகள் முகாம் அமைந்துள்ளது. இந்த முகாமில் காவிரி ஆறு ஓடுகிறது. சுற்றுலா பயணியரை கவர, இங்கு படகு சாகச விளையாட்டு நடக்கும்.கொரோனா உட்பட பல காரணங்களால் இந்த விளையாட்டு நிறுத்தப்பட்டது. இந்நிலையில், இதை மீண்டும் துவக்க, மாவட்ட கலெக்டர் சாருலதாவிடம், துபாரே படகுகள் சங்கத்தினர் அனுமதி கோரியிருந்தனர்.கலெக்டரும், கடும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி, விளையாட்டு சாகசங்களை நடத்த அனுமதியளித்துள்ளார்.இது குறித்து, சங்க தலைவர் கிருஷ்ணப்பா கூறியதாவது:கன மழையால் காவிரி ஆற்றில் அதிகளவில் தண்ணீர் செல்கிறது. இதனால் இந்த விளையாட்டுக்கு உகந்ததாக இருக்கும். இதையடுத்து, 17 முதல் விளையாட்டு துவங்கியது. முதல் நாளே 40 - 50 சுற்றுலா பயணியர் ஆர்வமுடன் இதில் பங்கேற்றனர்.வரும் நாட்களில் இதன் எண்ணிக்கை அதிகரிக்கும் என நம்புகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.மாவட்ட நிர்வாகம் விதித்துள்ள நிபந்தனைகள்:l இந்த விளையாட்டில், 60 படகுகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறை பயணியர் மாறும் போது, கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்த பிறகே, மற்ற பயணியரை அனுமதிக்க வேண்டும்l பயணியர் கட்டாயமாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும். படகில், சுற்றுலா வழிகாட்டி உட்பட ஆறு பயணியர் பயணிக்கலாம்l 7 கிலோ மீட்டர் படகு சவாரிக்கு, நபர் ஒருவருக்கு, 700 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X