பொது செய்தி

தமிழ்நாடு

மத்திய அரசின் 'ஜீவன் ரக் ஷா' விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
மதுரை : மத்திய அரசின் சார்பில் பல்வேறு முக்கிய பேரிடரில் மீட்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு 'ஜீவன் ரக் ஷா' பதக்க விருது வழங்கப்படுகிறது.நீரில் முழ்கியவரை காப்பாற்றுதல், மின்சார விபத்து, சாலை விபத்துகள், தீ விபத்து, நிலச்சரிவு, விலங்கின தாக்குதல், சுரங்க மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு மனித உயிர்களை மீட்டவர்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம். அபாயகரமான நிலையில்

மதுரை : மத்திய அரசின் சார்பில் பல்வேறு முக்கிய பேரிடரில் மீட்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு 'ஜீவன் ரக் ஷா' பதக்க விருது வழங்கப்படுகிறது.

நீரில் முழ்கியவரை காப்பாற்றுதல், மின்சார விபத்து, சாலை விபத்துகள், தீ விபத்து, நிலச்சரிவு, விலங்கின தாக்குதல், சுரங்க மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு மனித உயிர்களை மீட்டவர்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம். அபாயகரமான நிலையில் உள்ளவரை போராடி மீட்டவர்களுக்கு 'சர்வோத்தம் ஜீவன் ரக் ஷா' பதக்கம் விருது வழங்கப்படுகிறது.

துணிச்சலுடன் தாமதமின்றி செயல்பட்டு மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை போராடி மீட்டவர்களுக்கு 'உத்தம் ஜீவன் ரக் ஷா' பதக்க விருது வழங்கப்படுகிறது. தான் காயம்பட்டிருந்திருந்தாலும் வீரத்துடன் மற்றவர்கள் உயிரை காத்தவர்களுக்கு ஜீவன் ரக் ஷா பதக்கம் வழங்கப்படுகிறது.

விண்ணப்பம் மற்றும் விவரங்கள் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய www.sdat.tn.gov.in இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். 2021 க்கான 'ஜீவன் ரக் ஷா விருதிற்கான விண்ணப்பம்' எனக் குறிப்பிட்டு ஆக., 2 க்குள் அனுப்ப வேண்டிய முகவரி : மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகம், ரேஸ்கோர்ஸ் மைதானம், ரேஸ்கோர்ஸ் ரோடு, மதுரை - 625 002. இத்தகவலை மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X