பொது செய்தி

இந்தியா

மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்ட, 1,114 கோடி ரூபாய் வழங்க கோரிக்கை

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
பெங்களூரு-பெங்களூரு மக்களுக்கு, சிறப்பான மருத்துவ சேவை வழங்க, கூடுதல் சுகாதார மையங்கள், மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்ட, 1,114 கோடி ரூபாய் வழங்கும்படி, மாநில அரசிடம் பெங்களூரு மாநகராட்சி கோரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பாக, பெங்களூரு மாநகராட்சி சார்பில், அரசுக்கு அனுப்பப்பட்டுள்ள கோரிக்கை:மாநகராட்சியின் 198 வார்டுகளில், வெறும் 141 வார்டுகளில் மட்டும், ஆரம்ப சுகாதார

பெங்களூரு-பெங்களூரு மக்களுக்கு, சிறப்பான மருத்துவ சேவை வழங்க, கூடுதல் சுகாதார மையங்கள், மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்ட, 1,114 கோடி ரூபாய் வழங்கும்படி, மாநில அரசிடம் பெங்களூரு மாநகராட்சி கோரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பாக, பெங்களூரு மாநகராட்சி சார்பில், அரசுக்கு அனுப்பப்பட்டுள்ள கோரிக்கை:மாநகராட்சியின் 198 வார்டுகளில், வெறும் 141 வார்டுகளில் மட்டும், ஆரம்ப சுகாதார மையங்கள் செயல்படுகின்றன. மற்ற வார்டுகளில், சுகாதார மையங்கள் கட்ட, அரசு அனுமதியளித்துள்ளது. இதற்காக, 10 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளது. இந்த தொகை போதாது. இதற்காக 114 கோடி ரூபாய் தேவைப்படும். பெங்களூரு மக்களுக்கு, சிறப்பான மருத்துவ சேவை வழங்க, நகரின் 28 சட்டசபை தொகுதிகளிலும், ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள், நான்கு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் கட்ட, 1,000 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.பெங்களூரு மாநகராட்சி சுகாதாரப்பிரிவு சிறப்பு கமிஷனர் ரந்தீப் கூறியதாவது:மாநகராட்சி சார்பில் மருத்துவமனை கட்ட சொந்த நிலம் தேவைப்படுகிறது. ஒருவேளை சொந்த நிலம் கிடைக்கா விட்டால், அவசர தேவைக்கு வாடகை கட்டடங்களில், மருத்துவமனை துவங்க ஆலோசிக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது.இதுவரை, 20 வாடகை கட்டடங்கள், அடையாளம் காணப்பட்டுள்ளன. இங்கு நடப்பாண்டு இறுதிக்குள், மருத்துவமனைகள் துவங்கப்படும்.தற்போதுள்ள மருத்துவமனைகளை புதுப்பிக்க, புதிதாக மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் கட்ட, அரசிடம் நிதியுதவி கேட்கப்பட்டுள்ளது. கிடைத்ததும் பணிகள் துவங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X