பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் 'எலக்ட்ரிக் பஸ்' இயக்க' எனர்ஜி எபிஷியன்சி' நிறுவனம் தயார்!

Updated : ஜூலை 20, 2021 | Added : ஜூலை 20, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
சென்னை : தமிழக அரசுடன் இணைந்து, மத்திய அரசின், 'எனர்ஜி எபிஷியன்சி' நிறுவனம், சென்னையில் சுற்றுச்சூழலை பாதிக்காத, 'எலக்ட்ரிக்' எனப்படும், பேட்டரியில் இயங்கும்பஸ்களை இயக்க உள்ளது.தமிழக போக்குவரத்து துறை சார்பில், சென்னையில், தனியார் நிறுவனம் வாயிலாக வடிவமைக்கப்பட்ட முதல் எலக்ட்ரிக் பஸ், 2019 இறுதியில், சென்னை சென்ட்ரல் - திருவான்மியூர் வழித்தடத்தில் சோதனை

சென்னை : தமிழக அரசுடன் இணைந்து, மத்திய அரசின், 'எனர்ஜி எபிஷியன்சி' நிறுவனம், சென்னையில் சுற்றுச்சூழலை பாதிக்காத, 'எலக்ட்ரிக்' எனப்படும், பேட்டரியில் இயங்கும்பஸ்களை இயக்க உள்ளது.latest tamil newsதமிழக போக்குவரத்து துறை சார்பில், சென்னையில், தனியார் நிறுவனம் வாயிலாக வடிவமைக்கப்பட்ட முதல் எலக்ட்ரிக் பஸ், 2019 இறுதியில், சென்னை சென்ட்ரல் - திருவான்மியூர் வழித்தடத்தில் சோதனை ரீதியாக இயக்கப்பட்டது.


latest tamil newsபின், அந்த பஸ் சேவை நிறுத்தப்பட்டது. ஜெர்மனி நாட்டை சேர்ந்த நிதி நிறுவனம் வாயிலாக, 500 எலக்ட்ரிக் பஸ்களை கொள்முதல் செய்யவும், தமிழக அரசு முடிவு செய்தது. அத்திட்டமும் செயல்படுத்தப்படவில்லை.டீசலில் இயங்கும் பஸ், லிட்டர் டீசலில், 5 கி.மீ., செல்லும். தற்போது, லிட்டர் டீசல் விலை, 94 ரூபாயாக உள்ளது. எலக்ட்ரிக் பஸ்சை ஒரு முறை சார்ஜ்செய்தால், 50 கி.மீ.,க்கு மேல் செல்லும். டீசல் பஸ்சை விட செலவு, 30 - 40 சதவீதம் குறைவு.


மக்கள் தொகை

இந்நிலையில், தற்போது மத்திய அரசு, 40 லட்சத்துக்கு மேல் மக்கள் தொகை உள்ள ஒன்பது நகரங்களில் எலக்ட்ரிக் பஸ்களை இயக்க, மத்திய அரசின் எனர்ஜி எபிஷியன்சி நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளது.இதன்படி, மஹாராஷ்டிர மாநிலத்தில், மும்பை, புனே; டில்லி; கர்நாடகா மாநிலம், பெங்களூரு; தெலுங்கானா, ஐதராபாத்; தமிழகம், சென்னை; குஜராத்தில், ஆமதாபாத், சூரத்; மேற்கு வங்கம், கோல்கட்டா ஆகிய ஒன்பது நகரங்களில், எலக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.எனர்ஜி எபிஷியன்சி நிறுவனம், தமிழக அரசுடன் இணைந்து, சென்னையில் எலக்ட்ரிக் பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளது.


latest tamil news


இது குறித்து மத்திய மின் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஒரு எலக்ட்ரிக் பஸ் விலை, 1 கோடி ரூபாய்க்கு மேலாகும். ஏற்கனவே நிதி நெருக்கடியில் இருப்பதுடன், விலையும் அதிகம் இருப்பதால், மாநில அரசுகள் சொந்தமாக எலக்ட்ரிக் பஸ்களை வாங்க தயக்கம் காட்டுகின்றன.மத்திய அரசின் அனுமதியை அடுத்து, எனர்ஜி எபிஷியன்சி நிறுவனம், எலக்ட்ரிக் பஸ்களை வாங்கும். ஒரே சமயத்தில் அதிக பஸ்களை வாங்குவதால், அந்நிறுவனத்திற்கு குறைந்த விலையில் பஸ்கள் கிடைக்கும்.


வருவாய் பங்கீடு

சென்னையில், எலக்ட்ரிக் பஸ்களை இயக்குவது தொடர்பாக, எனர்ஜி எபிஷியன்சி அதிகாரிகள், விரைவில் தமிழக போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் பேச்சு நடத்த உள்ளனர்.அரசு அனுமதிக்கும் வழித்தடத்தில், எனர்ஜி எபிஷியன்சி, எலக்ட்ரிக் பஸ்களை இயக்கும். டிக்கெட் கட்டணம், வருவாய் பங்கீடு உள்ளிட்டவை தொடர்பாக, அதிகாரிகளின் பேச்சின் போது முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arul selvaraj - Sivakasi ,இந்தியா
21-ஜூலை-202106:43:18 IST Report Abuse
Arul selvaraj குஜராத்தில் பேருந்துகள் செல்ல தனி வழித்தடங்கள் உள்ளது. பேருந்துகள் செல்ல தனி வழித்தடங்கள் அமைத்து அவற்றில் பேருந்துகள், ஆம்புலன்ஸ், தீயணைப்பு, காவல் துறை  வாகனங்கள் மாட்டும் செல்ல அனுமதிக்கலாம். அதில் பேருந்துகளை மட்டும் மின்சாரத்தில் இயக்கலாம். மின்சார ரயில்கள் போல overhead Electric line அமைத்து மின்சார பேருந்துகளை இயக்கலாம். Overhead Electric lineனும், பேட்டரியும் இருக்க வேண்டும். Electric line இல்லாத இடத்தில் பேட்டரியில் இயங்கும். Electric lineனில் இயங்கும் போது பேட்டரி charge ஆகும். இப்படி கட்டமைப்பை ஏற்படுத்தினால் மின்சார பேருந்துகளை நீண்ட தூரம் இயக்க முடியும்.
Rate this:
Cancel
Ram - ottawa,கனடா
20-ஜூலை-202115:59:02 IST Report Abuse
Ram அரசு இயக்கினால் ஒழுங்காக இருக்காது
Rate this:
Cancel
Kumar - Madurai,இந்தியா
20-ஜூலை-202115:14:38 IST Report Abuse
Kumar ஆமா இதையும் நஷ்டத்துக்கு ஓட்டவா? தமிழ்நாட்டில் 20000 போருந்துகள் உள்ளன. தினமும் ரூபாய் 500 லாபம் என்றாலும் மாதம் 30 கோடி கிடைக்கும்.ஆனால் இங்கு பேருந்துகள் நஷ்டத்தில் ஓடுகின்றன.ஜெய்ஹிந்த். வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X