பொது செய்தி

இந்தியா

17 குழந்தைகளுக்கு .உடல் நலக் குறைபாடு

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
ஹாவேரி-ஹாவேரி மாவட்டத்தில், சுகாதாரத்துறை அலுவலர்கள் நடத்திய ஆய்வில், 17 ஆயிரம் குழந்தைகள் உடல்நலக் குறைபாடுடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கொரோனா மூன்றாம் அலை தடுப்பு நடவடிக்கையாக, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், 16 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள், சிறுவர்களின் உடல் நலத்தை கண்காணிக்கவும், அறிந்து கொள்வதற்கும் மருத்துவ குழு அமைக்கப்பட்டது.உடல் நலக்

ஹாவேரி-ஹாவேரி மாவட்டத்தில், சுகாதாரத்துறை அலுவலர்கள் நடத்திய ஆய்வில், 17 ஆயிரம் குழந்தைகள் உடல்நலக் குறைபாடுடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கொரோனா மூன்றாம் அலை தடுப்பு நடவடிக்கையாக, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், 16 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள், சிறுவர்களின் உடல் நலத்தை கண்காணிக்கவும், அறிந்து கொள்வதற்கும் மருத்துவ குழு அமைக்கப்பட்டது.உடல் நலக் குறைவுசுகாதாரத்துறை குழுவினர், ஆய்வு மேற்கொண்டதில், 17 ஆயிரத்து 230 குழந்தைகள் உடல் நலக் குறைவுடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:களப்பணி மூன்றாம் அலையிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க களப்பணி மேற்கொள்ளப்பட்டது. ஜூலை இறுதிக்குள், மூன்று லட்சம் குழந்தைகளை ஆய்வு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.ஆனால், இதுவரை நான்கு லட்சம் குழந்தைகளின் உடல்நலம் பரிசோதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முதல் அலையின்போது, நான்கு லட்சம் குழந்தைகளின் உடல்நலம் பரிசோதிக்கப்பட்டது.மாவட்டத்தின் 80 சதவீதம் குழந்தைகளின் உடல்நலம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு விட்டது. இந்த ஆய்வில், 1,213 குழந்தைகள் பிறப்பிலிருந்தே ஊட்டச்சத்து குறைபாட்டுடன் உள்ளனர்; 3,294 குழந்தைகளுக்கு சில வைட்டமின் குறைபாடுகள் உள்ளன.மேலும், 7,501 குழந்தைகள் நோய் பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளன. 1,065 பேர் மனநல நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. 981 குழந்தைகள் கடுமையான ஊட்டசத்து குறைபாட்டுடன் உள்ளனர்; 1, 977 குழந்தைகளுக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.ஆய்வு நடத்தியதில் மொத்தமாக, 17 ஆயிரத்து 230 குழந்தைகள் உடல்நலம் குறைபாடுடன் இருக்கின்றனர். ஆய்வு செய்யப்பட்ட குழந்தைகளில், 2,488 பேரை மேல் சிகிச்சை பெறுவதற்கு மருத்துவமனைகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.சத்து நிறைந்த உணவு ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் பெற்றோருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.அவர்களுக்கு தேவையான சத்து நிறைந்த உணவு பொருட்கள் வழங்குவது அவசியமாகியுள்ளது.குழந்தைகள் நல மருத்துவர்கள் மூலம், உடல் நல குறைபாடுள்ள குழந்தைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.இவ்வாறு கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X