பொது செய்தி

தமிழ்நாடு

ஆயிரம் ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிற்பம் கண்டுபிடிப்பு

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
பேரையூர் : மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா வேளாம்பூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டது.கவசக்கோட்டை விவசாயி ராதாகிருஷ்ணன் தகவலின்படி மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் முனீஸ்வரன் தலைமையில் வழக்கறிஞர் நாகபாண்டி, சிவக்குமார் வேளாம்பூர் மாரியம்மன் கோயில் பின்புற முட்புதர்களை களஆய்வு செய்த போது சிற்பம்

பேரையூர் : மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா வேளாம்பூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டது.

கவசக்கோட்டை விவசாயி ராதாகிருஷ்ணன் தகவலின்படி மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் முனீஸ்வரன் தலைமையில் வழக்கறிஞர் நாகபாண்டி, சிவக்குமார் வேளாம்பூர் மாரியம்மன் கோயில் பின்புற முட்புதர்களை களஆய்வு செய்த போது சிற்பம் எடுக்கப்பட்டது.

முனைவர் முனீஸ்வரன் கூறியதாவது : சிதைந்த நிலையில் 3 அடி உயரம், 2 அடி அகலத்தில் வர்த்தமானர் எனும் சமண சமயத்தின் 24வது தீர்த்தங்கரான மகாவீரர் தியான கோலத்தில் சிற்பம் உள்ளது. நீண்ட துளையுடைய காதுகள், முகம் தெளிவற்று தேய்ந்த நிலையில் விரிந்த மார்புடன் உள்ளது. தேய்ந்த நிலையில் 3 சிங்கங்கள் உள்ள பீடத்தில் மீது சிம்மாசனத்தில் அர்த்த பரியங்கா ஆசனத்தில் யோகமுத்திரையுடன் மகாவீரர் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கவசக்கோட்டை செங்கமேடு பகுதியில் கண்டறியப்பட்ட மகாவீரர் சிற்பமும் இச்சிற்ப உருவமும் ஓப்பீட்டின்படி பத்தாம் நூற்றாண்டை சேர்ந்தவையாக இருக்கலாம். இப்பகுதியிலும் சமண பள்ளி வழிபாடு இருந்ததை அறியலாம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X