அன்று தண்ணீரால் அழகு... இன்று கழிவால் கண்ணீர்; 30 ஆண்டு முந்தைய வைப்பாற்றை காண ஆசை

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
சாத்துார் : 30 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டு முழுவதும் தண்ணீர் கரை புரண்டு ஓட சாத்துார் நகருக்கு அழகு சேர்த்ததோடு சுற்றுப்பகுதிக்கும் நீராதாரமாக அமைந்தது வைப்பாறு. இதில் ஓடிய நீரால் சங்கரநத்தம், வெம்பக்கோட்டையில் அணைகளும் உருவாகின.அன்று நதியாக ஒடி அழகுக்கு அழகு சேர்த்து வைப்பாறு தற்போது சாக்கடை கழவால் இதன் இயற்கை அழகும் சிதைத்து விட்டன. ஒரு காலத்தில் குடிநீர்

சாத்துார் : 30 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டு முழுவதும் தண்ணீர் கரை புரண்டு ஓட சாத்துார் நகருக்கு அழகு சேர்த்ததோடு சுற்றுப்பகுதிக்கும் நீராதாரமாக அமைந்தது வைப்பாறு. இதில் ஓடிய நீரால் சங்கரநத்தம், வெம்பக்கோட்டையில் அணைகளும் உருவாகின.அன்று நதியாக ஒடி அழகுக்கு அழகு சேர்த்து வைப்பாறு தற்போது சாக்கடை கழவால் இதன் இயற்கை அழகும் சிதைத்து விட்டன.

ஒரு காலத்தில் குடிநீர் ஆதாரமாக இருந்த வைப்பாறு இன்று கழிவுநீர் குட்டையாக மாற இதன் இயற்கை அழகையே சிதைத்து விட்டது. மழை பொழிவும் குறைய வைப்பாற்றின் நீர் வழித்தடங்கள் ஆக்கிரமிப்புக்குள்ளானதால் அவ்வபோது பெய்யும் மழை நீரின் நீரோட்டமும் நின்று போனது.படந்தால் வசந்தம் நகர், குருலிங்காபுரம், அண்ணா நகர், மேலக்காந்திநகர், கீழக் காந்திநகர் பகுதிகளில் வளர்ச்சி அடைந்து குடியிருப்புகள் அதிகரிக்க இங்கிருந்து வரும் கழிவு நீரை சுமந்து செல்லும் சாக்கடையாக மாறி விட்டன.

ஆற்றில் கட்டப்பட்ட செக்டேம் கழிவு நீரால் ததும்புகிறது.பன்றிகளோ சுதந்திரமாக உலா வருகின்றன. ஆற்றின் கரையில் அமைந்துள்ள நம்பி ராஜபுரம், அமீர் பாளையம், புதுப்பாளையம் மக்கள் கொசுக்கடிக்கு ஆளாகி கொடிய நோய்களுக்கு உள்ளாகின்றனர். வைப்பாற்றை மீட்டெடுக்க பொதுப்பணித்துறையினர் முன் வர வேண்டும். இதோடு உள்ளாட்சி அமைப்புகளும் இங்கு கழிவு நீர் கலப்பதை தடுக்க மாற்று வழியை உருவாக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X