பொது செய்தி

இந்தியா

சுயேச்சை எம்.எல்.ஏ.,பா.ஜ.,வில் இணைவு

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
சாம்ராஜ் நகர்-பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து விலகி, சுயேச்சை எம்.எல்.ஏ.,வாக உள்ள மகேஷ், தாலுகா, மாவட்ட பஞ்சாயத்து தேர்தல் நேரத்தில், பா.ஜ.,வில் இணைய தயாராகிறார். தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து, ஆதரவாளர்களின் கருத்தை கேட்டறிகிறார்.சாம்ராஜ்நகர் கொள்ளேகால் எம்.எல்.ஏ., மகேஷ், பகுஜன் சமாஜ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.கட்சிக்கு எதிராக நடந்து கொண்டதாக கூறி,

சாம்ராஜ் நகர்-பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து விலகி, சுயேச்சை எம்.எல்.ஏ.,வாக உள்ள மகேஷ், தாலுகா, மாவட்ட பஞ்சாயத்து தேர்தல் நேரத்தில், பா.ஜ.,வில் இணைய தயாராகிறார். தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து, ஆதரவாளர்களின் கருத்தை கேட்டறிகிறார்.சாம்ராஜ்நகர் கொள்ளேகால் எம்.எல்.ஏ., மகேஷ், பகுஜன் சமாஜ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.கட்சிக்கு எதிராக நடந்து கொண்டதாக கூறி, கட்சியிலிருந்து நீக்கப்பட்டு, தற்போது சுயேச்சையாக உள்ளார்.பா.ஜ., அரசு மீது, எந்த குற்றச்சாட்டையும் சுமத்தாமல், அக்கட்சி தலைவர்களுடன் சுமூகமாக நடந்து கொள்கிறார்.தொகுதி அபிவிருத்தியில், கவனம் செலுத்தியுள்ளார். அடுத்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., வேட்பாளராக போட்டியிட ஆலோசிக்கிறார்.அதற்கு முன் நடக்கும், மாவட்ட, தாலுகா பஞ்சாயத்து தேர்தலில், தன் ஆதரவாளர்களை வெற்றி பெற வைத்து, தொகுதியில் தன் சக்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளார்.இது தொடர்பாக, தொகுதியில் சுற்றி வந்து ஆதரவாளர்களின் கருத்தை கேட்டறிகிறார். சாதக, பாதகங்கள் குறித்து விவாதிக்கிறார்.திட்டமிட்டபடி நடந்தால், தாலுகா, மாவட்ட பஞ்சாயத்து தேர்தலுக்கு முன்பே, மகேஷ் பா.ஜ.,வில் இணையும் வாய்ப்புள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X