ஜோக் நீர் வீழ்ச்சிக்கு, சுற்றுலா பயணியரை ஈர்க்கும் பணிகளுக்கு எதிர்ப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஜோக் நீர் வீழ்ச்சிக்கு, சுற்றுலா பயணியரை ஈர்க்கும் பணிகளுக்கு எதிர்ப்பு

Added : ஜூலை 20, 2021
Share
பெங்களூரு-உலக பிரசித்தி பெற்ற ஜோக் நீர் வீழ்ச்சிக்கு, சுற்றுலா பயணியரை ஈர்க்கும் நோக்கில், ஐந்து நட்சத்திர ஓட்டல் உட்பட, பல்வேறு அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளும், கர்நாடக அரசின் திட்டத்துக்கு, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.உலக பிரசித்தி ஷிவமொகா சாகராவிலுள்ள, ஜோக் நீர் வீழ்ச்சி உலக பிரசித்தி பெற்றது. உலகின் எல்லா பகுதியிலிருந்தும்,

பெங்களூரு-உலக பிரசித்தி பெற்ற ஜோக் நீர் வீழ்ச்சிக்கு, சுற்றுலா பயணியரை ஈர்க்கும் நோக்கில், ஐந்து நட்சத்திர ஓட்டல் உட்பட, பல்வேறு அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளும், கர்நாடக அரசின் திட்டத்துக்கு, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.உலக பிரசித்தி ஷிவமொகா சாகராவிலுள்ள, ஜோக் நீர் வீழ்ச்சி உலக பிரசித்தி பெற்றது. உலகின் எல்லா பகுதியிலிருந்தும், ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகின்றனர்.சுற்றுலா பயணியரை ஈர்க்க, மாநில அரசு பல திட்டங்களை வகுத்துள்ளது. நீர் வீழ்ச்சி அருகில், ஐந்து நட்சத்திர ஓட்டல் கட்டுவது உட்பட பல்வேறு அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள, திட்டம் வகுத்துள்ளது. அரசின் திட்டத்துக்கு, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். நிலச்சரிவு அபாயம் இங்கு அபிவிருத்தி பணிகளை நடத்தினால், நிலச்சரிவு போன்ற அபாயம் ஏற்படும் என, எச்சரித்துள்ளனர்.சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது:பெரிய, பெரிய கட்டடங்கள் கட்டுவதால், நீர் வீழ்ச்சி சுற்றுப்பகுதிகளில், பூமி தளர்ந்து நிலச்சரிவு போன்ற, இயற்கை பேரிடருக்கு வழி வகுக்கும். வரும் நாட்களில், நீர் வீழ்ச்சியின் இயற்கை தன்மை மாறக்கூடும்.மேற்கு தொடர்ச்சி பகுதியிலிருந்து, பாய்ந்து வரும் சராவதி ஆற்றிலிருந்து, நீர் வீழ்ச்சி உருவாகியுள்ளது.படகு சவாரிசுற்றுலாத்துறை 185 கோடி ரூபாய் செலவில், 1,000 பேர் தங்கக்கூடிய, ஐந்து நட்சத்திர ஓட்டல் உட்பட, பல்வேறு அபிவிருத்தி பணிகளை செய்யவும், படகு சவாரிக்கு வாய்ப்பளிக்கவும் திட்டமிட்டுள்ளது.ஜோக் நீர் வீழ்ச்சி, இயற்கையான முறையில் உருவானது. இப்பகுதியில் அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டால், சுற்றுப்புற பகுதிகளில், அபூர்வமான உயிரினங்கள், தாவரங்கள் நாசமாக, அரசே அனுமதியளித்ததாக ஆகும்.நடத்தக்கூடாது எனவே நீர் வீழ்ச்சியை சுற்றிலும், எந்த பணிகளையும் நடத்தகூடாது. சுற்றுலா பயணியரை ஈர்க்க வேண்டுமானால், சாகராவில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தட்டும். அங்கிருந்து சிறப்பு பஸ்களில், சுற்றுலா பயணியரை அழைத்து வரட்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X