பொது செய்தி

தமிழ்நாடு

அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகளை ஒதுக்க தூய்மை பணியாளர் முறையீடு

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை மாநகராட்சி 49 வது வார்டு நாராயணபுரத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகளை ஒதுக்க வேண்டும் என துாய்மை பணியாளர்கள் கலெக்டர் அனீஷ்சேகரிடம் முறையிட்டனர்.இதுகுறித்து முத்துமாரி, மீனாட்சி, முருகாயி உள்ளிட்ட பெண் துாய்மை பணியாளர்கள் மனு அளித்து பின் கூறியதாவது: மாநகராட்சி 48, 49 வார்டுகளில் 40 க்கும்

மதுரை : மதுரை மாநகராட்சி 49 வது வார்டு நாராயணபுரத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகளை ஒதுக்க வேண்டும் என துாய்மை பணியாளர்கள் கலெக்டர் அனீஷ்சேகரிடம் முறையிட்டனர்.

இதுகுறித்து முத்துமாரி, மீனாட்சி, முருகாயி உள்ளிட்ட பெண் துாய்மை பணியாளர்கள் மனு அளித்து பின் கூறியதாவது: மாநகராட்சி 48, 49 வார்டுகளில் 40 க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் பணிபுரிகின்றனர். சொந்தமான குடியிருக்க வீடுகள் இல்லை. வாடகை வீடுகளில் குடியிருக்கிறோம். எங்களில் சிலருக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டு வீட்டு வரி ரசீதும் வைத்துள்ளோம், என்றனர்.

ஓய்வூதியம் தேவை

பூஜாரிகள் பேரமைப்பு மாவட்ட தலைவர் செல்லையா தலைமையில் பூஜாரிகள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: எந்த எதிர்பார்ப்புமின்றி பரம்பரையாக ஆன்மிக ஈடுபாட்டுடன் கோயில்களில் வருவாய் இன்றி பணிபுரியும் பூஜாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் வழங்க வேண்டும். பூஜாரிகள் நல வாரியத்தை செயல்படுத்த வேண்டும், என கூறியுள்ளனர்.

கோயிலை இடிக்க எதிர்ப்பு

ஹிந்து முன்னணி புறநகர் செயலாளர் வெங்கடேஷ் தலைமையில் நிர்வாகிகள் மதுரை கிழக்கு ஒன்றியம் இலங்கியேந்தல் வாழவந்தாள் அம்மன் கோயிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர். அவர்கள், 'ஊர் ஒற்றுமைக்கு சான்றாக திகழும் இந்த கோயிலை இடிக்க சதி நடக்கிறது. கோயிலை இடிக்க கூடாது,' என்றனர்.

கால்வாய் ஆக்கிரமிப்பு

விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில இணை பொது செயலாளர் சந்திரசேகரன், பா.ஜ., செயற்குழு உறுப்பினர் ரவிபாலா அளித்த மனுவில், 'கூடல்நகர் சொக்கலிங்நகர் 7 வது தெருவில் பொதுப்பாதை, பொதுப்பணித்துறைக்கு கால்வாயை ஆக்கிரமித்து வழிபாட்டு தலம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கால்வாய் துார்வாரப்படுவதில்லை. போக்குவரத்து தடைபடுகிறது. கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்,' என கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X