சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் செய்திகள்...

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
புகையிலை விற்றவர்கள் கைதுசிவகாசி: தடை புகையிலை விற்பனை செய்த பார்த்திபன் 30, முத்துப்பாண்டி 39 ,கருப்பசாமி 42, வேல்முருகன் 34, ஆகியோரை போலீசார் கைது செய்து,புகையிலை பாக்கெட்களை பறிமுதல் செய்தனர்.பிறந்தநாள் விழாவில் மோதல்சிவகாசி: திருத்தங்கல் முனீஸ்வரன் காலனியை சேர்ந்த செல்வம் தனது பிறந்தநாளை கொண்டாடியபோது, இவரும் நண்பர்கள் மணிகண்டன், உதயகுமார் ஆகியோர் அப்பகுதி

புகையிலை விற்றவர்கள் கைது

சிவகாசி: தடை புகையிலை விற்பனை செய்த பார்த்திபன் 30, முத்துப்பாண்டி 39 ,கருப்பசாமி 42, வேல்முருகன் 34, ஆகியோரை போலீசார் கைது செய்து,புகையிலை பாக்கெட்களை பறிமுதல் செய்தனர்.

பிறந்தநாள் விழாவில் மோதல்

சிவகாசி: திருத்தங்கல் முனீஸ்வரன் காலனியை சேர்ந்த செல்வம் தனது பிறந்தநாளை கொண்டாடியபோது, இவரும் நண்பர்கள் மணிகண்டன், உதயகுமார் ஆகியோர் அப்பகுதி சிறுவன் மாரீஸ்வரனை கேலி செய்தனர். தட்டிக்கேட்ட கே.கே. நகரை சேர்ந்த கோடிஸ்வரன் 23, மாரீஸ்வரனை, செல்வம், மணிகண்டன், உதய குமார் பீர் பாட்டிலால் தாக்கினர். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்

எஸ்.பி., அலுவலகம் முன் தற்கொலை முயற்சி

விருதுநகர்: ராஜபாளையத்தை சேர்ந்தவர் ேஷக் முகம்மது 42. இவரும் மனைவியும் கடந்த 8 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். சிறுநீரக பாதிப்பு காரணத்தால் ேஷக் முகம்மது ஒன்றறை ஆண்டுகளாக டயாலிசிஸ் செய்து வருகிறார். இதனால் அவர் வேலைக்கு செல்லவில்லை. வருமானம் இன்றி தவிப்பதால் மனைவியை சேர்த்து வைக்கும் படி மனு அளித்தம் நடவடிக்கை எடுக்காததால், விருதுநகர் எஸ்.பி., அலுவலகம் முன் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்தார். இவரை போலீசார் கார்த்திகைச் செல்வி, சரவணசெல்வி தடுத்து நிறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X