பொது செய்தி

தமிழ்நாடு

வளர்ச்சி பணிகள்: கமிஷனர் ஆய்வு 

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை மாநகராட்சி மண்டலம் 4 சிருங்கேரி முத்துபாண்டி நகரில் ரூ.42.60 லட்சத்தில் கட்டப்படும் உபகழிவு நீரேற்று நிலையம் உட்பட ரூ.73.47 லட்சத்தில் நடக்கும் வளர்ச்சி பணிகளை கமிஷனர் கார்த்திகேயன் ஆய்வு செய்தார்.நேதாஜி 4வது தெருவில் ரூ.4.22 லட்சத்தில் அமைக்கப்பட்ட செம்மண் ரோடு, வக்கீல் புதுத் தெருவில் ரூ.16.38 லட்சத்தில் அமைக்கப்பட்ட தார் ரோடு, எம்.எல்.ஏ., நிதியில் பழங்காநத்தம்

மதுரை : மதுரை மாநகராட்சி மண்டலம் 4 சிருங்கேரி முத்துபாண்டி நகரில் ரூ.42.60 லட்சத்தில் கட்டப்படும் உபகழிவு நீரேற்று நிலையம் உட்பட ரூ.73.47 லட்சத்தில் நடக்கும் வளர்ச்சி பணிகளை கமிஷனர் கார்த்திகேயன் ஆய்வு செய்தார்.

நேதாஜி 4வது தெருவில் ரூ.4.22 லட்சத்தில் அமைக்கப்பட்ட செம்மண் ரோடு, வக்கீல் புதுத் தெருவில் ரூ.16.38 லட்சத்தில் அமைக்கப்பட்ட தார் ரோடு, எம்.எல்.ஏ., நிதியில் பழங்காநத்தம் வடக்கு, பாடைப்பட்டி தெருவில் ரூ.10.27 லட்சத்தில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் ரோடு பணிகளை அவர் ஆய்வு செய்தார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஜான்சிராணி பூங்கா பணிகளை பார்வையிட்டு விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டார்.உதவி செயற்பொறியாளர்கள் முருகேசபாண்டியன், ஆரோக்கிய சேவியர், பி.ஆர்.ஓ., மகேஸ்வரன், உதவிப் பொறியாளர் பாபு உடன் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X