சேதமான சாலையால் விபத்து அபாயம்| Dinamalar

சேதமான சாலையால் விபத்து அபாயம்

Added : ஜூலை 20, 2021
Share
சென்னை, செங்குன்றம் ஜி.என்.டி., சாலையில், நாரவாரிக்குப்பம் பேரூராட்சி அலுவலகம், செங்குன்றம் காவல் நிலையம், கிராம நிர்வாக அலுவலகம் ஆகியவை அடுத்தடுத்து உள்ளன. பேரூராட்சி அலுவலகத்தை ஒட்டி, திரு.வி.க., தெரு - ஜி.என்.டி., சாலையை இணைக்கும் சந்திப்பில், தனியார் இன்டர்நெட் கேபிள் புதைக்கும் பணிக்காக, ஓராண்டுக்கு முன் தோண்டப்பட்ட சாலை, இதுவரை சீரமைக்கப்படவில்லை.இதனால், இந்த

சென்னை, செங்குன்றம் ஜி.என்.டி., சாலையில், நாரவாரிக்குப்பம் பேரூராட்சி அலுவலகம், செங்குன்றம் காவல் நிலையம், கிராம நிர்வாக அலுவலகம் ஆகியவை அடுத்தடுத்து உள்ளன. பேரூராட்சி அலுவலகத்தை ஒட்டி, திரு.வி.க., தெரு - ஜி.என்.டி., சாலையை இணைக்கும் சந்திப்பில், தனியார் இன்டர்நெட் கேபிள் புதைக்கும் பணிக்காக, ஓராண்டுக்கு முன் தோண்டப்பட்ட சாலை, இதுவரை சீரமைக்கப்படவில்லை.இதனால், இந்த சாலையில் வருவோர், நிலைதடுமாறி விழுந்து, விபத்தில் சிக்குகின்றனர். மழை நீர் வடிகாலில் உள்ள கூர்மையான இரும்பு கம்பியும், அவர்களை பதம் பார்க்கிறது. நாரவாரிக்குப்பம் பேரூராட்சி நிர்வாகம், இதை உடனே சரிசெய்ய வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X