பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.8326 கோடி கடன் இலக்கு; அறிக்கையை வெளியிட்டார் கலெக்டர்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்திற்கு 2021---22 நிதியாண்டில் ரூ.8,326.30 கோடி கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்கான கடன் திட்ட அறிக்கையை கலெக்டர் மேகநாதரெட்டி வெளியிட்டார்.முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நபார்டு வங்கியுடன் இணைந்து கடன் திட்ட அறிக்கையை வடிவமைத்துள்ளது. மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களை அடிப்படையாக கொண்டு விவசாயத்திற்கு ரூ.3,044.78 கோடி, சிறு,

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்திற்கு 2021---22 நிதியாண்டில் ரூ.8,326.30 கோடி கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்கான கடன் திட்ட அறிக்கையை கலெக்டர் மேகநாதரெட்டி வெளியிட்டார்.

முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நபார்டு வங்கியுடன் இணைந்து கடன் திட்ட அறிக்கையை வடிவமைத்துள்ளது. மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களை அடிப்படையாக கொண்டு விவசாயத்திற்கு ரூ.3,044.78 கோடி, சிறு, குறு தொழில்துறைக்கு ரூ.3144.37 கோடி, ஏற்றுமதி துறைக்கு ரூ.193.64 கோடி, கல்வி கடனுக்கு ரூ.134.27 கோடி, வீடு கடன்கள் வழங்க ரூ.228.25 கோடி, புதுப்பிக்கதக்க ஆற்றல் சக்தி துறைக்கு ரூ.54.52 கோடி சமுக உட்கட்டமைப்பு துறைக்கு ரூ.52.83 கோடி, இதர முன்னுரிமை துறைகளுக்கு ரூ.542.92 கோடி, முன்னுரிமை இல்லா கடனாக ரூ.930.72 கோடி என ரூ.8,326.30 கோடி கடன் வழங்க இலக்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னோடி வங்கி மேலாளர் சண்முகவேல், நபார்டு வங்கி வளர்ச்சி மேலாளர் ராஜசுரேஷ்வரன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X