பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டம் குறைய பள்ளிகளில் முகாம்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
மதுரை : ஆரம்ப சுகாதார நிலையங்களில் இடவசதியின்றி மக்கள் கூட்டமாக ஓரிடத்தில் நிற்பதற்கு பதிலாக அந்தந்த பகுதியில் உள்ள பள்ளிகளில் தடுப்பூசி முகாம் அமைத்தால் கூட்டத்தை தவிர்க்கலாம்.மதுரை மாவட்டத்தில் 31 நகர்ப்புற, 37 கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் கோவிட் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடக்கிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு நோயாளிகள் அதிகளவில் வருகின்றனர்.

மதுரை : ஆரம்ப சுகாதார நிலையங்களில் இடவசதியின்றி மக்கள் கூட்டமாக ஓரிடத்தில் நிற்பதற்கு பதிலாக அந்தந்த பகுதியில் உள்ள பள்ளிகளில் தடுப்பூசி முகாம் அமைத்தால் கூட்டத்தை தவிர்க்கலாம்.

மதுரை மாவட்டத்தில் 31 நகர்ப்புற, 37 கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் கோவிட் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடக்கிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு நோயாளிகள் அதிகளவில் வருகின்றனர். அவர்களோடு தடுப்பூசி செலுத்த வருபவர்களும் நிற்க வேண்டியுள்ளது. நோயாளிக்கு மட்டுமே ஒரு நாற்காலி தரப்படும். மற்றவர்கள் மணிக்கணக்கில் வெயிலில் கால்கடுக்க தடுப்பூசிக்காக காத்திருக்க வேண்டியுள்ளது.

ஊசி செலுத்திய பின் 10 - 15 நிமிடங்கள் அமர்ந்திருக்க வேண்டும். அந்த வசதியும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இல்லை.இதற்கு பதிலாக அந்தந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அருகில் உள்ள பள்ளிகளை தடுப்பூசி செலுத்தும் முகாம்களாக மாற்றலாம். பள்ளிகளில் நிறைய வகுப்பறைகள் டேபிள், பெஞ்ச் வசதியுடன் இருப்பதால் நிழலில் சிரமமின்றி சமூக இடைவெளியுடன் உட்கார்ந்திருப்பர்.

பெரியவர்களுக்கு தடுப்பூசி செலுத்திய பின் கண்காணிப்பதும் எளிதாக இருக்கும். சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் நர்ஸ், உதவியாளர்களே பள்ளி முகாம்களுக்கு போதும். மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து சுகாதார துறையினருக்கு அறிவுறுத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X