சாதனையாளர்களுக்கு பாராட்டு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சாதனையாளர்களுக்கு பாராட்டு

Added : ஜூலை 20, 2021
Share
விருதுநகர் : கலெக்டர் அலுவலகத்தில் விளையாட்டு, வேலைவாயப்பு துறைகளில் சாதித்தவர்கள், ரத்த கொடையாளர்களுக்கு பாராட்டு சான்று வழங்கும் விழா நடந்தது. விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் டென்னிக்காய்ட், கேரம், பூப்பந்து போட்டிகளில் பதக்கம் பெற்ற 11 பேருக்கு ரூ.60 ஆயிரத்துக்கான காசோலைகள், வேலைவாய்ப்புத்துறை சார்பில் நடத்திய கட்டுரை போட்டியில் வென்ற மூவருக்கு பரிசுகளை

விருதுநகர் : கலெக்டர் அலுவலகத்தில் விளையாட்டு, வேலைவாயப்பு துறைகளில் சாதித்தவர்கள், ரத்த கொடையாளர்களுக்கு பாராட்டு சான்று வழங்கும் விழா நடந்தது.

விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் டென்னிக்காய்ட், கேரம், பூப்பந்து போட்டிகளில் பதக்கம் பெற்ற 11 பேருக்கு ரூ.60 ஆயிரத்துக்கான காசோலைகள், வேலைவாய்ப்புத்துறை சார்பில் நடத்திய கட்டுரை போட்டியில் வென்ற மூவருக்கு பரிசுகளை கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார். ரத்த தானம் செய்த 85 கொடையாளர்களுக்கு பாராட்டு சான்றுகள் வழங்கப்பட்டது. டீன் சங்குமணி, விளையாட்டு அலுவலர் ராஜா, வேலைவாய்ப்பு அலுவலர் சாந்தா பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X