பொது செய்தி

தமிழ்நாடு

மதுரை பீ.பீ.குளத்தில் வீடுகளை அகற்ற தடை கோரி வழக்கு; அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
மதுரை : நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல் மதுரை பீ.பீ.குளம் கண்மாய் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அதற்கு தடை கோரியும் தாக்கலான வழக்கில் அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.பீ.பீ.குளம் முல்லைநகர் குடியிருப்போர் நலச் சங்க செயலாளர் பாண்டியராஜ் தாக்கல் செய்த மனு: பீ.பீ.குளம் நேதாஜி மெயின் ரோட்டில்

மதுரை : நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல் மதுரை பீ.பீ.குளம் கண்மாய் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அதற்கு தடை கோரியும் தாக்கலான வழக்கில் அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

பீ.பீ.குளம் முல்லைநகர் குடியிருப்போர் நலச் சங்க செயலாளர் பாண்டியராஜ் தாக்கல் செய்த மனு: பீ.பீ.குளம் நேதாஜி மெயின் ரோட்டில் குறிப்பிட்ட சர்வே எண்ணில் 5000 குடும்பங்கள் உள்ளன. பீ.பீ.குளம் கண்மாயை ஆக்கிரமித்துள்ளதாகவும், காலி செய்யுமாறும் பொதுப்பணித்துறை 2018ல் நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது.

2020 டிசம்பரில் நீதிமன்றம், 'ஆக்கிரமிப்பாளர்களுக்கு விளக்கமளிக்க நோட்டீஸ் அளிக்க வேண்டும். விளக்கத்தின் அடிப்படையில் மேல்நடவடிக்கை எடுக்க வேண்டும். வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களை ராஜாக்கூர் குடிசை மாற்றுவாரிய இடம் அல்லது வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்,' என உத்தரவிட்டது. இதில் சீராய்வு மனு தாக்கல் செய்து நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.எங்களுக்கு விளக்கமளிக்க வாய்ப்பளிக்கவில்லை. மாற்று இடம் ஒதுக்கவில்லை.

நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல் மின் இணைப்பை துண்டிக்க மற்றும் வீடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வீடுகளை அகற்ற தடை விதிக்க வேண்டும். இவ்வாறு பாண்டியராஜ் குறிப்பிட்டார்.நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்தது. அரசுத் தரப்பு,'25 ஏக்கர் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. பலர் கடைகளை கட்டி வாடகைக்கு விட்டுள்ளனர். முறையாக அறிவிப்பு செய்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவங்கியது,' என தெரிவித்தது.மனுதாரர் தரப்பு, 'சம்பந்தப்பட்ட இடத்தில் டாஸ்மாக் கடை, வி.ஏ.ஓ., அலுவலகம் உட்பட பல அரசு கட்டடங்கள் உள்ளன,' என தெரிவித்தது.

நீதிபதிகள்,'டாஸ்மாக், வி.ஏ.ஓ.,அலுவலகம், எம்.எல்.ஏ.,-எம்.பி.,அலுவலகங்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் இருப்பதாக ஆவணங்கள் அடிப்படையில் உறுதியாகும்பட்சத்தில் அகற்ற உத்தரவிடப்படும்,' என்றனர்.நீதிபதிகள் உத்தரவு: இவ்விவகாரத்தில் தற்போதைய நிலை, சம்பந்தப்பட்ட சர்வே எண்ணிற்குட்பட்ட இடத்தில் யார், யார் வசிக்கின்றனர் விபரங்களை அரசுத்தரப்பில் அறிக்கையாக ஜூலை 22ல் தாக்கல் செய்ய வேண்டும், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X