சில வரி செய்திகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்

Added : ஜூலை 20, 2021
Share
லாரி மோதி இளம்பெண் பலிபூந்தமல்லி: பூந்தமல்லியை அடுத்த பாப்பான்சத்திரத்தைச் சேர்ந்தவர் தாரணி, 23. தனியார் நிறுவன ஊழியர். நேற்று காலை, திருமழிசை கூட்டு ரோடு அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது, சாலையில் இருந்த பள்ளத்தில் நிலை தடுமாறி விழுந்தார். அப்போது, பின்னால் வந்த லாரி மோதியதில், படுகாயமடைந்த தாரணி இறந்தார். விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுனர் பிரகாஷ், 32, என்பவரை

லாரி மோதி இளம்பெண் பலிபூந்தமல்லி: பூந்தமல்லியை அடுத்த பாப்பான்சத்திரத்தைச் சேர்ந்தவர் தாரணி, 23. தனியார் நிறுவன ஊழியர். நேற்று காலை, திருமழிசை கூட்டு ரோடு அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது, சாலையில் இருந்த பள்ளத்தில் நிலை தடுமாறி விழுந்தார். அப்போது, பின்னால் வந்த லாரி மோதியதில், படுகாயமடைந்த தாரணி இறந்தார். விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுனர் பிரகாஷ், 32, என்பவரை போலீசார் கைது செய்தனர்.வாலிபருக்கு 'போக்சோ'காசிமேடு: புழல், கதிர்வேடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக், 22. இவருக்கும் காசிமேடில் உள்ள, 14 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, கடந்த 8ம் தேதி கார்த்திக் கடத்தி சென்றார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரை விசாரித்த, ராயபுரம் மகளிர் போலீசார், சிறுமியை மீட்டு கார்த்திக்கை 'போக்சோ' மற்றும் குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்தனர். இவருக்கு உதவிய நண்பர், சுபாஷ் சந்திரபோஸ், 21, என்பவரும் கைது செய்யப்பட்டார்.  திருமங்கலம்: திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில், நேற்று முன்தினம் 17 வயது சிறுமியின் பெற்றோர் புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில், தன் மகளிடம் ஆசை வார்த்தை கூறி முகப்பேரைச் சேர்ந்த முருகன், 25, என்பவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குறிப்பிட்டு இருந்தார். விசாரித்த போலீசார் நேற்று முருகனை 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.400 மதுபாட்டில்கள் பறிமுதல்பேசின்பாலம்: புளியந்தோப்பு, ராஜாதோட்டம், கனால் தெருவில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 400 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றை பதுக்கிய ராகுல், 25, என்பவர் கைது செய்யப்பட்டார்.ஒரே பஸ்சில் மூவரிடம் 'ஆட்டை'கோயம்பேடு: திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தனலட்சுமி, 29. இவர், நேற்று காலை மதுரையில் இருந்து கோயம்பேடு பஸ் நிலையம் வந்தார். பின், ஆவடி செல்லும் தடம் எண்: 77 மாநகர பஸ்சில் ஏறும்போது மர்ம நபர்கள், அவரது 1 சவரன் நகை மற்றும் 1,500 ரூபாயை திருடிச் சென்றனர். மேலும், அதே பஸ்சில் பயணம் செய்த நிஷாந்த் 25 மற்றும் சீனிவாசன் 24 ஆகியோரின் மொபைல் போன்களையும் மர்ம நபர்கள் திருடியுள்ளனர். இது குறித்து கோயம்படு போலீசார் விசாரிக்கின்றனர்.புதுமாப்பிள்ளை தற்கொலைகோயம்பேடு: கோயம்பேடு, சின்மயா நகர், குலசேகரபுரத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம் 29; கார்ப்பென்டர். இவரது மனைவி அபிராமி, 25. கடந்த மாதம் 13ம் தேதி திருமணம் நடந்தது. மது போதைக்கு அடிமையான மாணிக்கம், வழக்கம்போல் நேற்று முன்தினம் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இது குறித்து கோயம்பேடு போலீசார் விசாரிக்கின்றனர்.போதை பொருள் விற்றோர் கைதுவண்ணாரப்பேட்டை: பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர்கள் அப்துல் அமீத், 21, கொருக்குப்பேட்டையை சேர்ந்த அருண், 23 மற்றும் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த அல்லா பகேஷ், 20. மூவரும் சிறுவர்களுக்கு கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்றது தெரியவந்தது. நேற்று மூவரையும் கைது செய்த போலீசார், 1.5 கிலோ கஞ்சா மற்றும் 1,110 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.பெண்ணிடம் நகை பறிப்புஅம்பத்துார்: சென்னை அம்பத்துார் அடுத்த சூரப்பட்டை சேர்ந்தவர் ராமு, 45; தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன் தினம் இரவு, மனைவி நித்யா, 37, மற்றும் மகளுடன், புழலில் இருந்து இருசக்கர வாகனத்தில், வீட்டிற்கு சென்றார். சூரப்பட்டு, சென்னை குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே சென்ற போது, மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், நித்யாவின் தாலி செயின் உட்பட, 8 சவரன் நகையை பறித்து சென்றனர். போலீசார் விசாரிக்கின்றனர். நர்ஸ் துாக்கிட்டு தற்கொலைசிட்லபாக்கம்: வேலுார் மாவட்டம், அணைக்கட்டு பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி, 26. இவர், குரோம்பேட்டை, நேரு நகர், ராஜாஜி தெருவில் தங்கி, தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வீட்டிற்கு வந்த லட்சுமி, நேற்று வீட்டின் படுக்கை அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிட்லபாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.ஆபாச சைகை காட்டியவரிடம் விசாரணைபுளியந்தோப்பு: புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், நேற்று பெற்றோருடன் சென்ற 15 வயது சிறுமி புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் 'தன்னை பார்த்து புளியந்தோப்பு, பிரகாஷ் ராவ் காலனியைச் சேர்ந்த குணசேகரன், 40, என்பவர் ஆபாச சைகை காட்டி, ஆடைகளை களைந்து அருவருப்பாக நடந்து கொண்டார்' என தெரிவித்திருந்தார். புகாரின் அடிப்படையில் குணசேகரனை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர்.மயங்கி விழுந்த தொழிலாளி பலிஅம்பத்துார்: சென்னை திருநின்றவூர், முத்தமிழ் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன், 49. அம்பத்துார் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று காலை 9:30 மணிக்கு வேலையில் இருந்த போது, திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.ஒரே நாளில் 1,092 டன் குப்பை அகற்றம்சென்னை: சென்னை மாநகரை சுத்தப்படுத்தும் வகையில், மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, தீவிர துாய்மை திட்டத்தை துவக்கி வைத்தார். மேலும், பொது இடங்களில் ஒட்டப்பட்டிருந்த 'போஸ்டர்'களை அகற்றும்படியும் உத்தரவிட்டார். அதன்படி, இதுவரை, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போஸ்டர்கள் அகற்றப்பட்டுள்ளன.அதேபோல், நேற்று ஒரே நாளில் 106 இடங்களில் 1,031 துாய்மை பணியாளர்கள், திடக்கழிவுகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். நேற்று ஒரே நாளில் 1,092.14 டன் குப்பை கழிவுகள் அகற்றப்பட்டதாக, மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X