பொது செய்தி

தமிழ்நாடு

கழிவு நீரகற்று நிலையத்தில் விருகை எம்.எல்.ஏ., ஆய்வு

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
எம்.ஜி.ஆர்.நகர்-எம்.ஜி.ஆர்.நகர் கழிவுநீரகற்று நிலையத்தில், எம்.எல்.ஏ., மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். கோடம்பாக்கம் மண்டலம், எம்.ஜி.ஆர்.நகர், 138வது வார்டு, சக்தி விநாயகர் கோவில் தெருவில், 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளிகள் அமைந்துள்ளன.இதன் அருகே, குடிநீர் வாரியத்தின் கழிவுநீர்

எம்.ஜி.ஆர்.நகர்-எம்.ஜி.ஆர்.நகர் கழிவுநீரகற்று நிலையத்தில், எம்.எல்.ஏ., மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். கோடம்பாக்கம் மண்டலம், எம்.ஜி.ஆர்.நகர், 138வது வார்டு, சக்தி விநாயகர் கோவில் தெருவில், 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளிகள் அமைந்துள்ளன.இதன் அருகே, குடிநீர் வாரியத்தின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தால், இங்கிருந்து நச்சுக் காற்று வெளியேறி, கடும் துர்நாற்றம் வீசுகிறது.இது, அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இது குறித்து, நம் நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது.இதையடுத்து, விருகம்பாக்கம் எம்.எல்.ஏ., மற்றும் கோடம்பக்கம் குடிநீர் வாரிய பகுதி பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள், நேற்று அப்பகுதியை ஆய்வு செய்தனர்.இது குறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:சைதாப்பேட்டையில் உள்ள பாரதிதாசன் காலனி, எஸ்.என்.பிளாக் மற்றும் திருநகர் கழிவுநீரகற்று நிலையத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர், எம்.ஜி.ஆர்.நகர் கழிவுநீர் அகற்று நிலையத்தில் சேகரமாகிறது.இங்கிருந்து, 900 மி.மீ., விட்டமுள்ள கழிவுநீர் பிரதான குழாய் வாயிலாக, அண்ணா பிரதான சாலை வழியாக நெசப்பாக்கம் கழிவுநீர் அகற்று நிலையத்தில் சேகரிக்கப்படுகிறது.இங்கு சேகரிக்கப்படும் கழிவுநீரின் அளவு குறைவாக இருக்கும்போது, துர்நாற்றம் வீசுகிறது. இதை நவீன தொழில்நுட்பம் வாயிலாக தடுக்க, நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுப்புறச்சுவரை உயர்த்தி அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X