சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கூடுதல் வட்டி கேட்டு மிரட்டிய 8 பேர் மீது 4 கந்துவட்டி வழக்குகள் பாய்ந்தன; 3 பேர் கைது

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை மாவட்டத்தில் கூடுதல் வட்டி கேட்டு மிரட்டியதாக 8 பேர் மீது கந்துவட்டி தடுப்புச்சட்டத்தின் கீழ் 4 வழக்குகள்பதிவு செய்யப்பட்டன. மூவர் கைது செய்யப்பட்டனர்.மதுரையில் தொழில் வளர்ச்சி, குடும்ப சூழல் காரணமாக வட்டிக்கு கடன் வாங்குகின்றனர். கூடுதல் வட்டி கேட்டு மிரட்டலுக்குள்ளாகி அதைசெலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொள்வது தொடர்கிறது. சமீபத்தில்கூட நகை கடை

மதுரை : மதுரை மாவட்டத்தில் கூடுதல் வட்டி கேட்டு மிரட்டியதாக 8 பேர் மீது கந்துவட்டி தடுப்புச்சட்டத்தின் கீழ் 4 வழக்குகள்பதிவு செய்யப்பட்டன. மூவர் கைது செய்யப்பட்டனர்.

மதுரையில் தொழில் வளர்ச்சி, குடும்ப சூழல் காரணமாக வட்டிக்கு கடன் வாங்குகின்றனர். கூடுதல் வட்டி கேட்டு மிரட்டலுக்குள்ளாகி அதைசெலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொள்வது தொடர்கிறது. சமீபத்தில்கூட நகை கடை உரிமையாளர் குடும்பத்துடனும், பாஸ்ட் புட் உரிமையாளர் ஒருவரும் தற்கொலை செய்து கொண்டனர். இதைதொடர்ந்து கூடுதல் வட்டி கேட்டு மிரட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

* இளமனுார் எல்.கே.பி., நகர் சரோஜா 52. இவர் சக்கிமங்கலம் வள்ளி 55, வினோத்குமாரிடம் 33, 2019ல் தொழில்வளர்ச்சிக்காக வீட்டு ஆவணங்களை அடகு வைத்து ரூ.5 லட்சம் கடன் வாங்கினார்.வட்டி செலுத்தி வந்த நிலையில் வள்ளி தரப்பு கூடுதல் வட்டிகேட்டு மிரட்ட சிலைமான் போலீசில் சரோஜா புகார் செய்தார். வள்ளி, வினோத்குமார்,சஞ்சீவி 58, கைது செய்யப்பட்டனர்.

* மேலுார் புவனேஸ்வரி 41. நில ஆவணங்களைஅடமானம் வைத்து மேலுார் கவுசில்யா தேவி, கணவர் முருகானந்தம் தரப்பிடம் ரூ.3 லட்சம் கடன் வாங்கினார். உடல்நலக் குறைவால் தொடர்ந்து வட்டிசெலுத்த முடியவில்லை. இந்நிலையில் வட்டியும், அசலும் சேர்த்து ரூ.7 லட்சம் தரவேண்டும் என மிரட்டினர். கவுசில்யாதேவி உட்பட மூவர் மீது மேலுார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

* குமாரம் நவநீதன் 36. குடும்பச்சூழலால் ஊமச்சிக்குளம் அசோக்கிடம் ரூ.2 லட்சம் கடன் வாங்கினார். மாதம் ரூ.20 ஆயிரம் வட்டி செலுத்தி ரூ.3.5 லட்சம் செலுத்திய நிலையில், கூடுதல் வட்டிக்கேட்டு மிரட்டியதாக அலங்காநல்லுார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

* நாகமலை புதுக்கோட்டை ராஜா 44. கம்ப்யூட்டர் தொழிலுக்காக 3 ஆண்டுகளுக்கு முன் கீழக்குயில் குடிபாலமுருகனிடம் 45, ரூ.80 ஆயிரம் வாங்கினார். அதற்கு வட்டி கேட்டு மிரட்டியதாக நாகமலைபுதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X