சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமியை கடத்திய இரு பெண்கள் கைது

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
நொளம்பூர்-பெற்றோருக்கு தெரியாமல் சிறுமியை கடத்திய இரு பெண்களை, போலீசார் கைது செய்தனர்.சென்னை, நொளம்பூர் யூனியன் சாலையை சேர்ந்தவர் புவனேஷ்வரி, 35. இவரது, 12 வயது மகள், தனியார் பள்ளியில், 7ம் வகுப்பு படிக்கிறார். கடந்த, 17ம் தேதி, வீட்டிற்கு வெளியே விளையாடிய சிறுமி மாயமானார். அக்கம் பக்கத்தினர் கூறிய தகவலின் படி, பக்கத்து வீட்டில் வசிக்கும் கவுசல்யா மீது, நொளம்பூர் காவல்

நொளம்பூர்-பெற்றோருக்கு தெரியாமல் சிறுமியை கடத்திய இரு பெண்களை, போலீசார் கைது செய்தனர்.சென்னை, நொளம்பூர் யூனியன் சாலையை சேர்ந்தவர் புவனேஷ்வரி, 35. இவரது, 12 வயது மகள், தனியார் பள்ளியில், 7ம் வகுப்பு படிக்கிறார். கடந்த, 17ம் தேதி, வீட்டிற்கு வெளியே விளையாடிய சிறுமி மாயமானார். அக்கம் பக்கத்தினர் கூறிய தகவலின் படி, பக்கத்து வீட்டில் வசிக்கும் கவுசல்யா மீது, நொளம்பூர் காவல் நிலையத்தில் புவனேஷ்வரி புகாரளித்தார்.இதையடுத்து, புவனேஷ்வரியின் உறவினர் உதயன் மற்றும் கவுசல்யாவின் சித்தி தேவி ஆகிய இருவரிடம் போலீசார் விசாரித்தனர். இதில், உதயன் மற்றும் கவுசல்யா திருமணம் செய்து கொள்ளாமல், குடும்பம் நடத்தி வருவது தெரிந்தது. மேலும், 12 வயது சிறுமியை கவுசல்யாவுடன், அவரது சித்தி தேவி, 27 என்பவர், பேருந்தில் ஏற்றி விட்டதும் தெரிந்தது. கவுசல்யா, திருச்சி திருவெறும்பூர் பகுதியில் சென்று கொண்டிருப்பது தெரிந்தது. உடனே, திருவெறும்பூர் மகளிர் போலீசாருக்கு தகவல் அளித்து, கவுசல்யாவை பிடித்து சிறுமியை மீட்டனர். நொளம்பூர் போலீசார் திருச்சி சென்று, இருவரையும் சென்னைக்கு அழைத்து வந்து, சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.கவுசல்யா மற்றும் அவரது சித்தி தேவி ஆகிய இருவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X