பொது செய்தி

தமிழ்நாடு

கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் எதிர்த்து மக்கள் உண்ணாவிரதம்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
மாங்காடு--மாங்காடு அருகே, மைதானத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட, 156வது வார்டு, முகலிவாக்கத்தில் உள்ள காலி மைதானத்தை, அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இந்த மைதானத்தில், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்

மாங்காடு--மாங்காடு அருகே, மைதானத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட, 156வது வார்டு, முகலிவாக்கத்தில் உள்ள காலி மைதானத்தை, அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இந்த மைதானத்தில், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியைச் சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்டோர், நேற்று காலை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஆலந்துார் ஆர்.டி.ஓ., யோகஜோதி, தாசில்தார் சரவணன் மற்றும் வருவாய் துறையினர், பொதுமக்களிடம் பேச்சு நடத்தினர். இதில் சமரசம் ஏற்பட்டதால், போராட்டத்தை கைவிட்டு கலைந்தனர்.'குடியிருப்பு அருகே கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால், அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசும்; தொற்று நோய்களும் பரவும். கடந்த ஆட்சியில், இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தோம். தற்போது மீண்டும் இங்கேயே சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளனர். மக்கள் நலன் கருதி, வேறு இடத்தில் அமைக்க வேண்டும்' என, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X