தி.மு.க.,வினர் தலையீடு தடுப்பூசி போடுவோர் தவிப்பு

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
நங்கநல்லுார்- நங்கநல்லுாரில் ஆளுங்கட்சி பிரமுகர்களின் தலையீடு காரணமாக, தடுப்பூசி போட வருவோர் தவித்து வருகின்றனர்.நங்கநல்லுார், ஹிந்து காலனி, எட்டாவது தெருவில் உள்ள மாநகராட்சி பள்ளி மற்றும் 21வது தெருவில் உள்ள தனியார் பள்ளியில், தடுப்பூசி இருப்பு உள்ள நாட்களில் போடப்பட்டு வருகிறது.இங்கு, நுாற்றுக்கணக்கானோர் 'டோக்கன்' பெற்று தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர்.

நங்கநல்லுார்- நங்கநல்லுாரில் ஆளுங்கட்சி பிரமுகர்களின் தலையீடு காரணமாக, தடுப்பூசி போட வருவோர் தவித்து வருகின்றனர்.நங்கநல்லுார், ஹிந்து காலனி, எட்டாவது தெருவில் உள்ள மாநகராட்சி பள்ளி மற்றும் 21வது தெருவில் உள்ள தனியார் பள்ளியில், தடுப்பூசி இருப்பு உள்ள நாட்களில் போடப்பட்டு வருகிறது.இங்கு, நுாற்றுக்கணக்கானோர் 'டோக்கன்' பெற்று தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர். இந்நிலையில், அந்த மையங்களில் தி.மு.க., பிரமுகர்களின் தலையீடு அதிகளவில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.அவர்கள் டோக்கன் இல்லாமல், தங்களுக்கு தெரிந்தவர்களை நேரடியாக அழைத்து செல்கின்றனர். மேலும், கூட்டாக நின்று அடிக்கடி 'செல்பி' எடுக்கின்றனர். இதனால், தடுப்பூசி போட வரும் பெண்கள் அவதிக்குள்ளாகின்றனர்.இப்பிரச்னைக்கு காவல் துறையினரும், கட்சி பொறுப்பாளர்களும் தீர்வு காண வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X