பொது செய்தி

இந்தியா

காவிரி - குண்டாறு இணைப்புக்கு எதிராக கர்நாடக அரசு மனு தாக்கல்

Updated : ஜூலை 20, 2021 | Added : ஜூலை 20, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
புதுடில்லி : காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் உபரி நீரை கடலில் கலக்க விடாமல் பயன்படுத்தும் திட்டம், காவிரி - குண்டாறு இணைப்பு திட்டம். அந்த நீரை, வறட்சியில் வாடும் தென் மாவட்டங்களுக்கு திருப்பிவிட, இந்த திட்டம் வழிவகுக்கும்.இந்த திட்டத்தால்

புதுடில்லி : காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.



latest tamil news



காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் உபரி நீரை கடலில் கலக்க விடாமல் பயன்படுத்தும் திட்டம், காவிரி - குண்டாறு இணைப்பு திட்டம். அந்த நீரை, வறட்சியில் வாடும் தென் மாவட்டங்களுக்கு திருப்பிவிட, இந்த திட்டம் வழிவகுக்கும்.இந்த திட்டத்தால் முதல் கட்டத்தில் கரூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள விளை நிலங்கள் பயனடையும்.


latest tamil news



இரண்டாவது கட்டத்தில் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள், மூன்றாவதாக விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள நிலங்களும் நீர்ப்பாசன வசதியைப் பெற்று பயனடையும்.


latest tamil news



இந்நிலையில், இந்த காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. கர்நாடகாவின் மேகதாது திட்டத்திற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழக அரசின் இந்த திட்டத்திற்கு, கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Annan - Madurai,இந்தியா
20-ஜூலை-202115:33:37 IST Report Abuse
Annan காவிரி தண்ணீர் தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகத்திற்கு செல்லவில்லை. அதனால் தமிழக பகுதியில் மேற்கொள்ளப்படும் திட்டங்களினால் கர்நாடகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லாத போது எந்த அடிப்படையில் எதிர்ப்பு தெரிவிக்கிறது. உச்சநீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். கர்நாடகத்திடம் தமிழகத்திற்கு வர வேண்டிய நீரின் பங்கு உள்ளதால் அதன் புதிய அணைத்திட்டங்களுக்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவிக்கிறது. கர்நாடகாவில் கபினி அணை கட்டிய பின் தமிழகத்திற்கு வர வேண்டிய தண்ணீரின் அளவு பாதியாக குறைந்து விட்டது. 40 ஆண்டுகளில் கர்நாடகா பாசனபரப்பை பல இலட்சம் ஏக்கர்களுக்கு மேல் விரிவு படுத்திவிட்டது. தமிழகத்தில் தஞ்சாவூர் பகுதியில் பல இலட்சம் ஏக்கர் பாசனப்பரப்பு குறைந்துவிட்டது. கர்நாடக அணைகளில் தண்ணீர் இருந்தாலும் உரிய நேரத்தில் தமிழகத்தின் பங்கை தருவதில்லை. அணை நிரம்பி வழிந்தோடும் போது மட்டுமே உபரி நீரை தமிழகத்திற்கு தருகிறது. தற்போது அந்த உபரி நீரையும் தமிழகத்தற்குள் நுழைவதற்கு முன் தடுத்து பயன்படுத்திக் கொள்ள மேகதாது அணையை கட்ட திட்டமிட்டுள்ளது. உபரி நீர் கடலுக்கு சென்று வீணாவதை தடுக்க தமிழகத்தில் தடுப்பணைகள் (கட்ட வழி) இல்லாததால் மற்ற நதிகளுக்கு திருப்பிவிட முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதையே காரணமாக வைத்து உபரி நீரை பங்கு நீராக கணக்கு காண்பிக்கும் கர்நாடகம் ஆடு நனையுதே என்று ஓநாய் அழுத கதையாக தானே தடுப்பு அணையை கட்டுவதாக நீலிக்கண்ணீர் வடிக்கிறது. தமிழகத்திற்குள் வந்த காவிரி தண்ணீரில் கர்நாடகத்திற்கு பங்கோ உரிமையோ இல்லாத போது தமிழகத்தின் திட்டங்களுக்கு கர்நாடகா எதிர்ப்பு தெரிவிப்பதற்கு நியாயமோ உரிமையோ இல்லை.
Rate this:
Cancel
B. இராமச்சந்திரன் - இராமநாதபுரம்,இந்தியா
20-ஜூலை-202113:39:22 IST Report Abuse
B. இராமச்சந்திரன் காவேரி ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தமிழகத்திற்கு சேரவேண்டிய நீரை வழங்குவது மட்டுமே கர்நாடகத்தின் பொறுப்பு... அந்த நீரை தமிழகம் எவ்வாறு பயன்படுத்தவேண்டும் என்று அறிவுறுத்தும் அதிகாரம் கர்நாடக அரசுக்கு இல்லை...
Rate this:
Cancel
Anbuselvan - Bahrain,பஹ்ரைன்
20-ஜூலை-202113:11:07 IST Report Abuse
Anbuselvan இரண்டு அரசுகளின் வாதமும் கோர்ட்டில் செல்லாது. ஆணை கட்டுவதற்கோ நீர் சேமிப்புக்கோ எந்த ஒரு தடையும் இல்லை காவேரி ஒப்பந்தத்தில். வழிகாட்டு குழுவுக்கு இதில் தலையிட ஒரு உரிமையும் இல்லை. மழை பொழிவுக்கு ஏற்றார் போல் தமிழகத்து கர்நாடக தண்ணீர் கொடுக்க மட்டுமே இந்த குழுவால் தலையிட்டு ஆணை பிறப்பிக்க அதிகாரம் உள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X