கள்ளக்காதல் விவகாரத்தில் வக்கீல் கொலை ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கள்ளக்காதல் விவகாரத்தில் வக்கீல் கொலை ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கைது

Added : ஜூலை 20, 2021
Share
திருவள்ளூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேரை, போலீசார் கைது செய்தனர்.சென்னை அடுத்த மதுரவாயலைச் சேர்ந்தவர் சங்கர் மகள் சத்யா, 30. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன், 35, என்பவருடன் திருமணம் நடந்தது; இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.ஓராண்டுக்கு முன் தம்பதி இடையே ஏற்பட்ட கருத்து

திருவள்ளூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேரை, போலீசார் கைது செய்தனர்.

சென்னை அடுத்த மதுரவாயலைச் சேர்ந்தவர் சங்கர் மகள் சத்யா, 30. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன், 35, என்பவருடன் திருமணம் நடந்தது; இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.ஓராண்டுக்கு முன் தம்பதி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.இந்நிலையில், வெள்ளேரிதாங்கலைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடேசன், 33, என்பவருடன், சில மாதங்களுக்கு முன் சத்யாவிற்கு பழக்கம் ஏற்பட்டது.தகவல் அறிந்த சத்யாவின் பெற்றோர் கண்டித்துள்ளனர். ஆனால் பெற்றோர் பேச்சை கேட்காமல், திருவள்ளூர் அடுத்த காக்களூரில் ஒரு வாரத்திற்கு முன், ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து சத்யா தங்கினார். இங்கு, வழக்கறிஞர் வெங்கடேசன், சத்யாவை பார்க்க அடிக்கடி வந்து சென்றுள்ளார்.இதையறிந்து, சத்யாவின் தந்தை சங்கர், தாய் சின்னம்மா, தங்கை சங்கீதா, தம்பி வினோத்குமார், சித்தி தேவி மற்றும் தங்கை கணவர் வெங்கடேசன் என ஆறு பேர், நேற்று காலை காக்களூர் சென்றனர்.அப்போது வீட்டில் இருந்த வெங்கடேசனை பார்த்ததும் ஆத்திரமடைந்தவர்கள், அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். தடுக்க வந்த சத்யாவையும் வெட்டி, ஆறு பேரும் அங்கிருந்து தப்பினர். பலத்த காயமடைந்த சத்யா, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., வருண்குமார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார். அதை தொடர்ந்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்கு பதிந்து, ஆறு பேரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்
- நமது நிருபர் -.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X