பொது செய்தி

தமிழ்நாடு

நீர்நிலையை மீட்க நிபுணர் குழு: ஐகோர்ட்

Added : ஜூலை 20, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை-சோழிங்கநல்லுாரில் நீர்நிலையை மீட்பதற்கு நிபுணர்கள் குழுவை அமைக்கும்படி, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சோழிங்கநல்லுார் அருகே உள்ள செம்மஞ்சேரியில், நீர்நிலையில் காவல் நிலையம் கட்டப்படுவதை எதிர்த்து, அறப்போர் இயக்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, காவல் நிலைய கட்டுமானத்துக்கு, உயர் நீதிமன்றம் தடை விதித்தது. நீர்நிலையில் தான் காவல் நிலைய

சென்னை-சோழிங்கநல்லுாரில் நீர்நிலையை மீட்பதற்கு நிபுணர்கள் குழுவை அமைக்கும்படி, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சோழிங்கநல்லுார் அருகே உள்ள செம்மஞ்சேரியில், நீர்நிலையில் காவல் நிலையம் கட்டப்படுவதை எதிர்த்து, அறப்போர் இயக்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, காவல் நிலைய கட்டுமானத்துக்கு, உயர் நீதிமன்றம் தடை விதித்தது. நீர்நிலையில் தான் காவல் நிலைய கட்டுமானம் உள்ளதா என்பது குறித்து, ஐ.ஐ.டி., பேராசிரியர்கள் குழு ஆய்வு செய்து, அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டது.இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது. விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. காவல் நிலையம் கட்டப்பட்ட இடம், நீர்நிலையாக இருந்தது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இதைத்தொடர்ந்து, முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:நீர்நிலைகள் குறித்து அறிவியல் பூர்வ ஆய்வு நடத்தப்பட வேண்டும். சோழிங்கநல்லுாரில் உள்ள நீர்நிலையை எப்படி மீட்பது என்பதை ஆராய, நிபுணர்கள் குழுவை அரசு அமைக்க வேண்டும். தனி நபர்கள் மட்டும் தவறுகள் செய்யவில்லை; அரசும் தவறு செய்கிறது. காவல் நிலையம் அங்கு இயங்க அனுமதிக்க வேண்டாம். இந்த உத்தரவை கண்டிப்புடன் பின்பற்றுவதை, உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
a natanasabapathy - vadalur,இந்தியா
20-ஜூலை-202107:54:50 IST Report Abuse
a natanasabapathy மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை கிளை மாட்டு தாவணி பேருந்து நிலையம் ஆகியவை ஏரியில் தான் கட்டப்பட்டு உள்ளன அவைகளையும் இடித்து அகற்ற வேண்டும் செய்வீர்களா நீதிமான்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X