சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சில மணி நேரத்தில் சிக்கிய கொலை குற்றவாளிகள்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
குரோம்பேட்டை-குரோம்பேட்டையில், அரிசி கடைக்காரரை கொலை செய்த மர்ம நபர்கள், அப்பகுதியில் சாவகாசமாக மது குடித்துக்கொண்டிருந்த போது, போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். கொலை நடந்த சில மணிநேரங்களில், குற்றவாளிகளில் இருவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர். குரோம்பேட்டை, நாகல்கேணி, இரட்டைமலை சீனிவாசன் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் 46. இவர்,

குரோம்பேட்டை-குரோம்பேட்டையில், அரிசி கடைக்காரரை கொலை செய்த மர்ம நபர்கள், அப்பகுதியில் சாவகாசமாக மது குடித்துக்கொண்டிருந்த போது, போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். கொலை நடந்த சில மணிநேரங்களில், குற்றவாளிகளில் இருவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர். குரோம்பேட்டை, நாகல்கேணி, இரட்டைமலை சீனிவாசன் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் 46. இவர், குரோம்பேட்டை, சி.எல்.சி., சாலையில், 'ஸ்ரீ கிருஷ்ணா ரைஸ் டிரேடர்ஸ்' என்ற பெயரில், அரிசி கடை நடத்தி வந்தார்.நேற்று முன்தினம் மாலை, கடை திறக்க வந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், ஆனந்தராஜை சரமாரியாக வெட்டி கொன்று தப்பினர். இது குறித்து குரோம்பேட்டை போலீசார் விசாரித்தனர். நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு, குற்றவாளிகள் நான்கு பேர், அங்குள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பு அருகே மது அருந்துவதாக தகவல் கிடைத்தது.இதையடுத்து, போலீசார் அந்த இடத்தை சுற்றி வளைத்தனர். போலீசார் வருவதை அறிந்த நான்கு பேரும், அங்கிருந்து தப்பியோட முயன்றனர். இதில் நாட்டு கால்வாயில் இறங்கி தப்ப முயன்ற இருவர் பிடிபட்டனர்; மற்ற இருவர் தப்பினர்.பிடிபட்டவர்கள் சி.எல்.சி., சாலை, சேம்பர்ஸ் காலனியைச் சேர்ந்த ரஞ்சித்குமார், 30, சதீஷ், 20, என்பது தெரியவந்தது. சதீஷ் மீது குரோம்பேட்டை காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. கைது செய்யப்பட்டோரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X