பொது செய்தி

தமிழ்நாடு

வசூல் அதிகாரிகளை மாற்ற சி.எம்.டி.ஏ., நடவடிக்கை

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
சென்னை-சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,வில், திட்ட அனுமதி உள்ளிட்ட பிரிவுகளில் நீண்ட காலமாக இருக்கும் வசூல் அதிகாரிகளை மாற்றுவதற்கான ஆய்வு பணிகள் துவங்கி உள்ளன.சி.எம்.டி.ஏ.,வில், முழுமை திட்ட பிரிவு, பரப்பு திட்ட பிரிவு, அமலாக்க பிரிவு, சாலை - ரயில் பிரிவு, பரப்பு வளர்ச்சி பிரிவு, கட்டுமான பிரிவு ஆகிய பிரிவுகள் உள்ளன. இதில், கட்டுமான திட்ட அனுமதி வழங்கும்

சென்னை-சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,வில், திட்ட அனுமதி உள்ளிட்ட பிரிவுகளில் நீண்ட காலமாக இருக்கும் வசூல் அதிகாரிகளை மாற்றுவதற்கான ஆய்வு பணிகள் துவங்கி உள்ளன.சி.எம்.டி.ஏ.,வில், முழுமை திட்ட பிரிவு, பரப்பு திட்ட பிரிவு, அமலாக்க பிரிவு, சாலை - ரயில் பிரிவு, பரப்பு வளர்ச்சி பிரிவு, கட்டுமான பிரிவு ஆகிய பிரிவுகள் உள்ளன. இதில், கட்டுமான திட்ட அனுமதி வழங்கும் பரப்பு திட்ட பிரிவு, அமலாக்க பிரிவு ஆகியவற்றில் மட்டும் பணியாற்ற, சில அதிகாரிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். பல ஆண்டுகள்இந்த பிரிவுகளில் இருந்தால், கட்டுமான நிறுவனங்களுடன் தொடர்பு ஏற்படும் என்பதும், அதனால், வேறுவிதமான பயன்கள் கிடைப்பதும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இதனால், இந்த பிரிவில் இருப்பவர்கள், வேறு எந்த பிரிவுகளுக்கும் மாற்றப்படுவதில்லை. அப்படியே மாற்றினாலும், ஆவணத்தில் மட்டும் அவர் அங்கு இருப்பதாக இருக்கும். அந்த நபர், கட்டுமான திட்ட அனுமதி பிரிவில் பணியில் இருப்பார். சீப் பிளானர் நிலையில் இருப்பவர்கள் ஆதரவு காரணமாக, இவர்கள் மாற்றப்படாமல் ஒரே இடத்தில் பல ஆண்டுகள் பணியில் இருக்கின்றனர்.இது குறித்து, கட்டுமான துறையினர் கூறியதாவது:ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக இருக்கும் அதிகாரிகள், தங்களுக்குள் ஒரு குழுவாக செயல்படுகின்றனர். அரசு விதி என்பதற்கு மாற்றாக, இவர்கள் ஒரு வழிமுறை வைத்து செயல்படுகின்றனர்.சுற்றியடிப்புஇதற்கு ஒத்துப் போகும் விண்ணப்பங்கள் தான், அடுத்த நிலைக்கு செல்லும். இவர்களை சந்திக்காவிட்டால், விண்ணப்பக் கோப்புகள், சில ஆண்டுகளுக்கு சுற்றி அடிக்கப்படும்.தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, புதிய அமைச்சர், அதிகாரிகள் வந்துள்ள நிலையில், இவர்கள் குறித்த விபரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன. விரைவில் இந்த அதிகாரிகள் மாற்றப்படுவர் என எதிர்பார்க்கிறோம்.அப்போது தான், சி.எம்.டி.ஏ.,வில் முறையாக திட்ட அனுமதி பணிகள் நடக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X