சகஜமாக செயல்படும் வார சந்தைகள் விபரீதம் உணராத பொதுமக்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சகஜமாக செயல்படும் வார சந்தைகள் விபரீதம் உணராத பொதுமக்கள்

Added : ஜூலை 20, 2021
Share
பள்ளிப்பட்டு--வார சந்தைகள் நடத்த அனுமதி வழங்கப்படாத நிலையில், அதிகாலையில் நடைபெறும் சந்தைகளில், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள், சகஜமாக நடமாடி வருகின்றனர். இதனால், நோய் பரவல் மீண்டும் வீரியம் பெரும் விபரீதம் உள்ளது.வார சந்தைகள் நடத்த இதுவரை அனுமதி வழங்கப்படாத நிலையில், ஆர்.கே.பேட்டை மற்றும் பள்ளிப்பட்டு தாலுகாக்களில், கிராமங்களில் வார சந்தைகள் காலை நேரத்தில்

பள்ளிப்பட்டு--வார சந்தைகள் நடத்த அனுமதி வழங்கப்படாத நிலையில், அதிகாலையில் நடைபெறும் சந்தைகளில், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள், சகஜமாக நடமாடி வருகின்றனர். இதனால், நோய் பரவல் மீண்டும் வீரியம் பெரும் விபரீதம் உள்ளது.வார சந்தைகள் நடத்த இதுவரை அனுமதி வழங்கப்படாத நிலையில், ஆர்.கே.பேட்டை மற்றும் பள்ளிப்பட்டு தாலுகாக்களில், கிராமங்களில் வார சந்தைகள் காலை நேரத்தில் நடத்தப்பட்டு வருகின்றன.அதிகாரிகள் தங்களின் அன்றாட பணிக்கு வரும் முன்பாக, இந்த சந்தைகள் நடத்தி முடிக்கப்பட்டு விடுகின்றன. பள்ளிப்பட்டு ஒன்றியம், அத்திமாஞ்சேரிபேட்டையில் நேற்று காலை சந்தை கூடியது.ஏராளமான பொதுமக்கள், சமூக விலகல் மற்றும் முக கவசம் அணியாமல், இங்கு கூடியிருந்தனர். இதனால், தற்போது கட்டுக்குள் வந்துள்ள நோய் பரவல், மீண்டும் வீரியம் பெறும் அபாய நிலை உள்ளது.இது குறித்து பள்ளிப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் அருள் கூறுகையில், 'ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், வார சந்தைகள் நடத்த அனுமதி இல்லை. 'தடையை மீறி நடத்தப்படும் வார சந்தையை தடுக்க, ஊராட்சி செயலர் மற்றும் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X