போலீஸ் டைரி

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
தகராறில் ஈடுபட்ட இருவர் கைதுவெள்ளவேடு: திருமழிசை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே, வெள்ளவேடு போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.அப்போது அப்பகுதியில், இரு வாலிபர்கள் கத்தியுடன் நின்று கொண்டு ஆபாசமாக பேசி, பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.போலீசார் இருவரையும் பிடித்து நடத்திய விசாரணையில், அவர்கள் திருமழிசை, பிரையாம்பத்து மோனிஷ், 20 மற்றும் கீர்த்தி, 28, என

தகராறில் ஈடுபட்ட இருவர் கைதுவெள்ளவேடு: திருமழிசை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே, வெள்ளவேடு போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.அப்போது அப்பகுதியில், இரு வாலிபர்கள் கத்தியுடன் நின்று கொண்டு ஆபாசமாக பேசி, பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.போலீசார் இருவரையும் பிடித்து நடத்திய விசாரணையில், அவர்கள் திருமழிசை, பிரையாம்பத்து மோனிஷ், 20 மற்றும் கீர்த்தி, 28, என தெரிய வந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்த வெள்ளவேடு போலீசார் இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.பைக் - லாரி மோதல்வெள்ளவேடு: வெள்ளவேடு அடுத்த, நேமம், நொச்சிமேடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபால், 34. இவர், நேற்று முன்தினம், யமாஹா ஒய்.எப்.இசட்., இருசக்கர வாகனத்தில் ஆண்டரசன்பேட்டைக்கு சென்று கொண்டிருந்தார்.நேமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வந்த போது எதிரே வந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.இதில், ஜெயபால் படுகாயமடைந்து, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து, இவரது உறவினர் ஏழுமலை அளித்த புகாரையடுத்து, வெள்ளவேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X