சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இறுதி ஊர்வல வெடியால் எரிந்தது மினி லாரி

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : இறுதி ஊர்வலத்தில் பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தீயில் லாரி எரிந்தது.ராமநாதபுரம் சூரன்கோட்டை கிராமத்தில் இறந்தவரின் உடல் அடக்கம் நேற்று முன்தினம் மாலை நடந்தது. 200க்கும் மேற்பட்டோர் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். பட்டாசு வெடிக்கப்பட்டது.பட்டாசுகளை மினி லாரியில் வைத்திருந்தனர்.ஊர்வலம் நயினார்கோவில் ரோட்டில் நீலகண்டி ஊரணி அருகே சென்ற போது பட்டாசு

ராமநாதபுரம் : இறுதி ஊர்வலத்தில் பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தீயில் லாரி எரிந்தது.

ராமநாதபுரம் சூரன்கோட்டை கிராமத்தில் இறந்தவரின் உடல் அடக்கம் நேற்று முன்தினம் மாலை நடந்தது. 200க்கும் மேற்பட்டோர் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். பட்டாசு வெடிக்கப்பட்டது.பட்டாசுகளை மினி லாரியில் வைத்திருந்தனர்.ஊர்வலம் நயினார்கோவில் ரோட்டில் நீலகண்டி ஊரணி அருகே சென்ற போது பட்டாசு தீப்பொறி மினி லாரியில் இருந்த மொத்த பட்டாசு மீது விழுந்து அனைத்து வெடிகளும் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. மினி லாரியில் நின்று வெடிகளை எடுத்து கொடுத்த இருவர் கீழே குதித்து தப்பினர்.வெடிகளின் நெருப்பில் மினி லாரி தீப்பற்றி எரிந்தது. அவ்வழியாக வந்த தண்ணீர் லாரியை நிறுத்தி தீயை அணைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X