தமிழ்நாடு

திருப்புத்தூர் விவசாயிகளின் கனவுத் திட்டம்; பெரியாறு கால்வாய் புனரமைத்து நனவாகுமா

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
திருப்புத்துார் : திருப்புத்துார் ஒன்றிய விவசாயிகளின் கனவுத் திட்டமான பெரியாறு விஸ்தரிப்பு கால்வாயை புனரமைத்து மீண்டும் நீர்வர வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.திருப்புத்துார் ஒன்றியத்தில் 3 ஆயிரம் ஏக்கர் பாசனத்திற்காக 1994ல் பெரியாறு விஸ்தரிப்புக் கால்வாய் கட்டப்பட்டது. பெரியாறு 7வது பிரதான கால்வாயிலிருந்து கருப்பூர்கோட்டையிருப்பு, ரணசிங்கபுரம்

திருப்புத்துார் : திருப்புத்துார் ஒன்றிய விவசாயிகளின் கனவுத் திட்டமான பெரியாறு விஸ்தரிப்பு கால்வாயை புனரமைத்து மீண்டும் நீர்வர வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

திருப்புத்துார் ஒன்றியத்தில் 3 ஆயிரம் ஏக்கர் பாசனத்திற்காக 1994ல் பெரியாறு விஸ்தரிப்புக் கால்வாய் கட்டப்பட்டது. பெரியாறு 7வது பிரதான கால்வாயிலிருந்து கருப்பூர்கோட்டையிருப்பு, ரணசிங்கபுரம் உள்ளிட்ட கிராமக் கண்மாய் வழியாக கிளைக் கால்வாய் திருப்புத்துார் பெரியகண்மாய் வரை கட்டப்பட்டது.

ரூ 21 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்ட இத்திட்டத்தின் மூலம் இப்பகுதியில் ஒரு போக நெல் சாகுபடி உறுதி செய்யப்படும் என்று விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால் மழையும், ஆறுகளும் பொய்த்தது போல இந்தக் கால்வாய் பாசன நீரும் வராமல் விவசாயிகளை ஏமாற்றியது.

பெரியாறு அணையில் 136 அடி நீர் இருந்த போதே மூன்று முறை இந்த வாய்க்காலில் நீர் வரத்து ஏற்பட்டது. 142 அடிக்கு நீர்தேக்க உத்தரவான நிலையில் இக்கால்வாயில் நீர் விட பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்கவில்லை.25 ஆண்டுகளாகி விட்ட நிலையில் இக்கால்வாய் தற்போது சிதைந்து முற்றிலுமாக மண் வாய்க்காலாக மாறி விட்டது.

திட்டத்தின் அடையாளமாக சில இடங்களில் குண்டுகற்களால் மட்டுமே சாட்சிகளாக நிற்கின்றன. மற்றபடி சிமென்ட் சிலாப் பதித்த கால்வாயை காணவில்லை.கருப்பூர் ஊராட்சித் தலைவர் அ.நாகராஜன் கூறுகையில், பல கோடி செலவில் விவசாயிகளுக்காக அமைக்கப்பட்ட இக் கால்வாய் பொதுப்பணித்துறையினரின் பொறுப்பற்ற நடவடிக்கையால் பலனில்லாமல் போய் விட்டது.

பராமரிக்காமல் கால்வாய் சிதைந்ததால், நீர் வரத்துக்கு நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர். பல கண்மாய்கள் பெருக வைக்கும் இந்த கால்வாயை மீண்டும் புனரமைக்க அரசு முன் வர வேண்டும்..' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X