பொது செய்தி

தமிழ்நாடு

'ஊரடங்கு தளர்வு பொறுத்து  கோவில் விழாக்கள்'

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
திருவள்ளூர்-''வரும் 30ம் தேதிக்கு பின், முதல்வர் அறிவிக்கும் தளர்வுகள் அடிப்படையில் தான் கோவில் விழாக்கள் நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும்,'' என, அமைச்சர் சேகர்பாபு திருவள்ளூரில் தெரிவித்தார்.திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவில் ஆடிக் கிருத்திகை மற்றும் பெரியபாளையம் பவானியம்மன் கோவில் ஆடி மாத விழா குறித்து ஆலோசனை

திருவள்ளூர்-''வரும் 30ம் தேதிக்கு பின், முதல்வர் அறிவிக்கும் தளர்வுகள் அடிப்படையில் தான் கோவில் விழாக்கள் நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும்,'' என, அமைச்சர் சேகர்பாபு திருவள்ளூரில் தெரிவித்தார்.திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவில் ஆடிக் கிருத்திகை மற்றும் பெரியபாளையம் பவானியம்மன் கோவில் ஆடி மாத விழா குறித்து ஆலோசனை கூட்டம், ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆகியோர் தலைமையில் நேற்று நடந்தது.கூட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது:கொரோனா தொற்றால் மாநிலத்தில் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, இம்மாதம் 30ம் தேதி வரை உள்ளது. இதனால் கோவில்களில் திருவிழாக்கள் பூஜைகள், யாகங்கள் மற்றும் உற்சவம் நடத்துவதற்கு தடை உள்ளது. பக்தர்கள் தரிசனத்திற்கு மட்டும் அனுமதிக்கப்படுகிறது.வரும் 30ம் தேதிக்கு பின், முதல்வர் ஸ்டாலின், அறிவிக்கும் தளர்வுகள் அடிப்படையில் தான், திருத்தணி கோவிலில் ஆடிக் கிருத்திகை விழா, பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில், ஆடி மாத திருவிழா நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும். திருவிழா காலங்களில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.பக்தர்களின் வருகை அதிகரிக்கும் போது காவல், வருவாய், போக்குவரத்து, மின்சாரம், தீயணைப்பு மற்றும் அறநிலையத் துறை வாயிலாக குழுக்கள் அமைத்து, சீர்படுத்தி வரிசையில் நின்று தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X