தமிழ்நாடு

சென்னை ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
சென்னையின் குடிநீர் ஆதாரமாக உள்ள ஏரிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் வாயிலாக, சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. தற்போது, புதிதாக தேர்வாய் கண்டிகை ஏரி உருவாக்கப்பட்டுள்ளது.இவற்றின் ஒட்டுமொத்த கொள்ளளவு, 11.7 டி.எம்.சி., என்ற நிலையில், தற்போது, 7.46 டி.எம்.சி., கையிருப்பு உள்ளது.

சென்னையின் குடிநீர் ஆதாரமாக உள்ள ஏரிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் வாயிலாக, சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. தற்போது, புதிதாக தேர்வாய் கண்டிகை ஏரி உருவாக்கப்பட்டுள்ளது.இவற்றின் ஒட்டுமொத்த கொள்ளளவு, 11.7 டி.எம்.சி., என்ற நிலையில், தற்போது, 7.46 டி.எம்.சி., கையிருப்பு உள்ளது. அதிகபட்சமாக புழலில், 2.65 டி.எம்.சி., செம்பரம்பாக்கத்தில், 2.63 டி.எம்.சி., பூண்டியில், 1.14 டி.எம்.சி., நீர் உள்ளது.

ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து, பூண்டி ஏரிக்கு நீர் திறக்கப்பட்டு, வினாடிக்கு 846 கனஅடி நீர் நேற்று கிடைத்தது. நீர் பிடிப்பு பகுதிகளில், சில நாட்களாக மழை பெய்து வருவதால், ஏரிகளுக்கு நீர்வரத்து திடீரென அதிகரித்துள்ளது.நேற்று காலை நிலவரப்படி, புழல் ஏரிக்கு வினாடிக்கு 557 கனஅடி; செம்பரம்பாக்கத்திற்கு வினாடிக்கு, 150 கனஅடி; சோழவரத்திற்கு 137 கனஅடி, தேர்வாய் கண்டிகை ஏரிக்கு, 30 கனஅடி நீர்வரத்து கிடைத்தது.மழைதொடரும் பட்சத்தில், ஏரிகளின் நீர்கையிருப்பு வேகமாக உயர வாய்ப்புள்ளது
- நமது நிருபர் -.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X